Venus Star Transit : சுக்கிரன், ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். அவர் ஏற்கனவே புதனுடன் இணைந்து லக்ஷ்மி நாராயண் ராஜயோகத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், பூரம் நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிர பகவான் பலரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுப்பார்
ஆகஸ்ட் மாதத்தில், சுக்கிரனின் ராசி இருப்பு, புதன் மற்றும் சூரியனுடன் இணைவது, நட்சத்திர மாற்றம் என பல மாறுதல்களை அடைவதால் ஒட்டுமொத்தமாக நல்ல பலன்களை அனுபவிக்கும் சில ராசிகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்வோம்...
கிரகங்கள் ராசியை மட்டுமல்ல, நட்சத்திரங்களையும் அவ்வப்போது கடந்து செல்கின்றன. மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம், ஈர்ப்பு, காதல் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் இன்னும் எட்டு நாட்களில் நட்சத்திரத்தை மாற்றுகிறார்
சுக்கிரன் மகம் நட்சத்திரத்தில் தற்போது சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
சுக்கிரனின் பூர நட்சத்திரப் பெயர்ச்சியால், சிம்ம ராசியினருக்கு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். வேலை, தொழில் மற்றும் நிதி விஷயங்களில் திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். பண வரத்து நன்றாக இருக்கும்
சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் பெரும் லாபம் அடையப்போவது துலாம் ராசிக்காரர்கள். எதிர்பாராத பண வரத்து வந்து சேரும், மனதில் இருந்த கவலைகள் குறையும் காலம் இது, குடும்பத்தில் அனைவரிடமும் நெருக்கம் அதிகரிக்கும், தவறான புரிதல்கள் மாறி சுமூகமான சூழல் நிலவும்
கோபக்கார விருச்சிக ராசிக்காரர்களின் சீற்றத்தைக் குறைத்து சிரிப்பை வரவழைக்கும் வகையில் சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சி அமையும். மனதில் மகிழ்ச்சி பொங்கினால் முகத்தில் சிரிப்பு வரும் தானே? காதலும் கைகூடும், குழந்தை பாக்கியத்தையும் சுக்கிரன் கொடுப்பார்
புதனும் சூரியனும் சுக்கிரனுடன் சேரும்போது தனுசு ராசிக்காரர்களின் மனதில் உல்லாசம் பொங்கும், தடைபட்ட காரியங்கள் நிறைவேறி நிம்மதி பிறக்கும்
அழகுக்கும் செழுமைக்கும் காரகரான சுக்கிரன் பகவானின் மாற்றமானது மீன ராசிக்காரர்களின் எண்ணங்களை ஈடேற்றும், வாகனம் வாங்கும் யோகம் வந்து சேரும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது