கீர்த்தி சுரேஷ் பாதி..தமன்னாவில் மீதி! யார் இந்த புது நடிகை? வைரலாகும் போட்டோஸ்..

Actress Looks Like Keerthy Suresh And Tamannaah Bhatia : ஒரு புது நடிகை, பார்ப்பதற்கு கீர்த்தி சுரேஷின் ஜாடையிலும் தமன்னாவின் ஜாடையிலும் இருக்கிறார். அவர் யார் தெரியுமா? 

Actress Looks Like Keerthy Suresh And Tamannaah Bhatia : பொதுவாக, அனைத்து நடிகைகளுக்கும் தனித்தனியான அழகு இருக்கும். ஆனால், யாரையாவது ஒரே மாதிரி இருந்து பார்த்துள்ளீர்களா? அதிலும், இரு நடிகைகளின் முக ஜாடை, ஒரே நடிகைக்கு இருந்து பார்த்துள்ளீர்களா? அப்படி ஒரு நடிகையின் புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகில் 7 பேர் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று கூறுவர். அந்த வகையில், இந்த நடிகையும் அந்த 7 பேரில் ஒருவர் போல..என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த நடிகை யார்? அவர் பார்ப்பதற்கு தமன்னா மற்றும் கீர்த்தி சுரேஷ் போல இருக்கிறாரா? இங்கு அது குறித்து பார்ப்போம். 

1 /8

தென்னிந்திய திரையுலகிற்கு புதிதாக வந்திருக்கும் நடிகை, பாக்கியஸ்ரீ போர்ஸ். தமிழ் படங்களில் இதுவரை நடித்திராத இவரை அதற்குள் தமிழ் ரசிகர்கள் வைரலாக்க ஆரம்பித்து விட்டனர்.

2 /8

கடந்த ஆண்டு முதல் திரையுலகில் இருக்கும் இவர், இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில்தான் இதுவரை நடித்திருக்கிறார். 

3 /8

பாலிவுட் நாயகன் கார்த்திக் ஆரியன் உடன் இவர் சேர்ந்து நடித்த சந்து சாம்பியன் திரைப்படம், இந்தியில் வெளியானது. இது இவரது இரண்டாவது படமாகும், முதல் படம், யாரியன் 2.

4 /8

பாக்கியஸ்ரீ, இதுவரை 3 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதில், சமீபத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் இவர் ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

5 /8

நடித்ததே மூன்று படம்தான் என்றாலும் அந்த படங்கள் அனைத்திலும் முன்னணி கதாநாயகர்களுடன்தான் ஜோடியாகி இருக்கிறார்.

6 /8

அவுரங்காபாத்தில் பிறந்த இவர்,மகாராஷ்ட்ராவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவரை தேடி இன்னும் பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். 

7 /8

2024ல் பெரிதாக வைரலான கதாநாயகிகளுள் ஒருவராக இருக்கிறார், பாக்கியஸ்ரீ போர்ஸ். இதையடுத்து இவர் குறித்த இன்னொரு விஷயமும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

8 /8

பாக்கியஸ்ரீ போர்ஸின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இவர் பார்ப்பதற்கு பாதி கீர்த்தி சுரேஷ் போலவும் மீதி தமன்னா போலவும் இருப்பதாக கூறி வருகின்றனர்.