வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... மாயங்கள் செய்யும் ப்ளூ டீ

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பலர் கிரீன் டீ அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதைப்போலவே, ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் நீல நிற சங்கு பூவினால் தயாரிக்கப்படும் ப்ளூ டீ பற்றி அறிந்து கொள்ளலாம்.

 

சங்கு பூவினால் தயாரிக்கப்படும் ப்ளூ டீ ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தது. மூலிகை டீ வகைகளில் மிகச் சிறந்த டீயாக கருதப்படும் இது, முதுமையை தடுப்பது முதல், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது வரை பல வகைகளில் நன்மை தரக்கூடியது.

 

1 /10

நீல நிற சங்குப்பூ அல்லது சங்கு புஷ்பத்தினால் தயாரிக்கப்படும், ப்ளூ டீ அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆப்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. கிரீன் டீக்கு இணையான ஆரோக்கிய நிலையில் கொண்டுள்ள இந்த டீயை குடிப்பதன் மூலம், கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எண்ணில் அடங்காதவை.  

2 /10

இதய ஆரோக்கியம்: சங்கு புஷ்பத்தில், ஆன்ட்டி ஹைப்பர் லிபிடமக் பண்புகள் காணப்படுவதால், கொலஸ்ட்ரால் எரிக்கப்பட்டு, இதய தமனிகளில் சேரும் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.  

3 /10

இரத்த சர்க்கரை அளவு: ப்ளூ டீயை வழக்கமாக அருந்துவதால், இன்சுலின் உற்பத்தி அதிகரித்து ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். எனவே, நீரழிவு நோயாளிகளுக்கான சிறந்த டீயாக இது இருக்கும்.

4 /10

உடல் பருமன்: சங்கு பூவில் தயாரிக்கப்படும் டீ வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் உடன் பருமன் குறையும்.

5 /10

இளமை: ப்ளூ டீயில் ஆன்டி கிளைக்கோஜன் இருப்பதால் முதுமை வாருவதைத் தடுக்கலாம். மேலும் சருமத்தையும் கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

6 /10

நுரையீரல் ஆரோக்கியம்: அழற்ச்சி எதிர்ப்பு பண்புகள், நுரையீரலின் வீக்கத்தை போக்கி சுவாசக் கோளாறுகளுக்கு கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.சங்குப்பூ பாராசட்டாமல் போல் செயல்பட்டு, காய்ச்சல் உடல் வலி போன்றவற்றை குணப்படுத்துகிறது.  

7 /10

செரிமான ஆரோக்கியம்: ப்ளூ டீ குடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை வெறும் வயிற்றில் ப்ளூ டீ குடிப்பதால் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

8 /10

மன அழுத்தம்: கிரீன் ப்ளூ டீயில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள், மன அழுத்தத்தை போக்கி உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் திறமை கொண்டுள்ளது. மனதை ரிலாக்ஸ் செய்து, தூக்கமின்மை பிரச்சனையை நீக்கவும் உதவுகிறது.

9 /10

இரத்த ஓட்டம்: சங்கு பூ டீயில் ரத்தக் ஓட்டத்தை மேம்படுத்தும் பண்புகள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.