Rahu And Its Conjunction With Other Navagrahas : எந்தவொரு கிரகத்துடன் இணைந்தாலும், அந்த கிரகத்தின் சுபாவத்தை சுவீகரித்துக் கொள்ளும் ராகு, சில நேரங்களில் பயங்கரமாய் எதிர்வினையாற்றுவார்...
ராகு, தான் இருக்கும் ராசியின் அதிபதி, அவர் பார்க்கும் கிரகங்கள், ராகுவுடன் சேர்ந்த கிரகங்கள் என்பவற்றைப் பொறுத்து வாழ்நாள் முழுவதும் தாக்கம் ஏற்படுத்துவார்...
மனிதராக பிறப்பதே நமது கர்ம வினைகளை தீர்ப்பதற்காகத் தான் என்று சொல்வதுண்டு. ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி ராகுவை தொடர்பு கொண்டால்,அல்லது ஏழாம் அதிபதி உடன் ராகு இணைந்திருந்தால், வாழ்நாள் முழுவதும் ராகுவின் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும் .
கர்ம வினையை ஏற்படுத்துவது நமது செயல்கள் தான். மனதில் விருபத்தை ஏற்படுத்தி ஆசையை ஏற்படுத்துபவர் ராகு, அதன் மூலம் கர்மம் சேர்க்க வைக்கிறார்
சேரும் கிரகங்களுக்கு ஏற்ப தனது பலன்களை மாற்றிக் கொடுக்கும் ராகு ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைப் பொறுத்து, தொழிலில் திருப்தி, தன்னிறைவு போன்றவற்றிற்குக் காரணகர்த்தாவாக இருப்பார்.
ராகுவின் ஆதிக்கம் ஒருவரின் ஜாதகத்தில் அதிகமாக இருந்தால், மனித முகம் இல்லாத தெய்வ வழிபாடு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்
ராகுவினால் ஏற்படக்கூடிய, தாக்கத்தை குறைக்க துர்க்கை வழிபாடு மிகவும் நல்ல வழியாக இருக்கும்
ராகு, சூரியனுடன் தொடர்பு பெற்றிருந்தால், வேறு பிரச்சனைகள் இருந்தாலும், வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது