கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் படம் உருவாகி வரும் நிலையில், ரஜினி மற்றும் மணிரத்னம் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இருவரும் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். கடைசியாக 1991ம் ஆண்டு வெளியான தளபதி படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றி இருந்தனர்.
தளபதி படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகியும் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் மணிரத்னம் மீண்டும் ரஜினியை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி படத்தில் மம்முட்டியும், ரஜினியும் இணைந்து நடித்து இருந்தனர். மகாபாரதத்தின் கர்ணன் மற்றும் துரியோதனனின் கதாபாத்திரங்களை வைத்து இப்படம் உருவாகி இருந்தனர்.
அந்த சமயத்தில் இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தளபதி படம் ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான ஒரு படமாக உள்ளது.
34 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் - மணிரத்னமும் இணைந்து 'தக் லைஃப்' படத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த படம் முடியும் தருவாயில் உள்ள நிலையில் ரஜினி படம் பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்று வருகிறது.