குளியலறைக்குள் நூலகமா? விசித்திரமான பழக்கம் கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசித்திரமான பழக்கங்கள் இருக்கும்.  அதில் சில பழக்கங்கள் வேடிக்கையாகவும், விசித்திரமானதாகவும் இருக்கும்.

 

1 /5

ஷாருக்கானுக்கு சாப்பிடும்போது போட்டோ எடுத்தால் பிடிக்காதாம் மற்றும் இவருக்கு ஐஸ்க்ரீம் என்றாலே வெறுப்பு தானாம்.  ஆனால் இவருக்கு கேஜெட்டுகள் மற்றும் வீடியோ கேம்கள் என்றால் அலாதி பிரியம்.  

2 /5

நடிகை சுஷ்மிதா சென் பாம்புகள் மீது தீரா காதல் கொண்டிருக்கிறார், அவர் தனது வீட்டில் கூட ஒரு நாகத்தை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறாராம்.  மேலும் அவருக்கு திறந்த வெளி குளியல் பிடிக்கும் என்பதால் தனது மொட்டை மாடியில் குளியல் தொட்டியையும் வைத்திருக்கிறார்.  

3 /5

சல்மான் கான் விதவிதமான சோப்புகளை பதுக்கி வைக்கும் விசித்திர பழக்கம் கொண்டவர்.  பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து செய்யப்படும் சோப்புகள் அவருக்கு பிடித்தவை.  மேலும் அவரிடம் உலகெங்கிலும் இருந்து கையால் செய்யப்பட்ட, டிசைனர் மற்றும் மூலிகை சோப்புகளை வைத்திருக்கிறார்.  

4 /5

அமிதாப் பச்சனுக்கு இரண்டு கைகளிலும் கடிகாரம் கட்டும் ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதாம்.  அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் வெளியில் செல்லும்போது இவர் தனது இரண்டு கைகளிலும் கடிகாரம் அணிந்து கொள்வாராம்.  ஒரு கடிகாரம் இந்திய நேரத்தையும், மற்றொரு கடிகாரம் அவர்கள் எந்த நாட்டிற்கு செல்கிறார்களோ அந்த நேரத்தையும் கொண்டிருக்குமாம்.  

5 /5

சைஃப் அலிகானிற்கு குளியலறையில் அமர்ந்து புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறதாம்.  இதற்காக அவரது குளியறையில் பிரத்யேகமாக நூலகம் அமைக்கப்பட்டு இருக்கிறதாம் மற்றும் அங்கு டெலிபோன் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறதாம்.