மிக்ஜாம் புயல் எச்சரிக்கை! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட தமிழ்நாடு அரசு

Cyclone Michaung Health Alert: வங்க கடலில் நிலைக் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 

  • Dec 02, 2023, 17:26 PM IST

மிக்ஜாங் புயல் வலுப்பெற்றதும் டிசம்பர் 4 ஆம் தேதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை ஒட்டி இருக்கும் தமிழகத்தின் 7 வட கடலோர மாவட்டங்களில் அடைமழை பெய்யும் வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

1 /8

மிக்ஜாங் புயல் சென்னைக்கு 450 கி.மீ தொலைவில் கிழக்கு - தென்கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும்

2 /8

சென்னையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் ஏறக்குறைய நிரம்பிவிட்ட நிலையில், உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. ஏரிகளின் வழித்தடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிகிறது

3 /8

இந்த நிலையில், புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார். 

4 /8

புயல் எச்சரிக்கை: மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தயார் நிலையில் இருக்க வேண்டுமென மாநில சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

5 /8

தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்றும், அவரச கால மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன

6 /8

நிவாரண மையங்களில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

7 /8

தேவையான அளவு கிருமி நாசினி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

8 /8

நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென பொது சுகாதாரத் துறை சார்பில் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவு.