அக்காலத்திலிருந்து இக்காலம் வரை முன்னோர்கள் பின்பற்றிய முறை இந்த ராசிகள் மற்றும் நேரம். இவற்றைக் கணிப்பதற்காக சில ஜோதிடர்களை அணுகி இதற்கான பலன்களைக் கேட்டுத் தெளிவு பெறுவார்கள். அதுபோல் இந்த 8 ராசிக்காரர்களும் அவர்கள் வாழ்க்கையில் எட்டாத உயரத்தில் தனித்துவமாகச் செயல்படுவதாக சில கூற்று சொல்லப்படுகிறது.
ஜாதகத்தின் கூற்றுப்படி சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் ஸ்டைலிஷாக இருக்கக்கூடியவர்களாக அவர்கள் வாழ்க்கையில் திறம்படச் செயல்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் குறிப்பிட்ட 8 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஆடம்பரமாகவும், தனித்துவமாகவும் இருப்பார்கள் என்று கூறுகின்றனர். மேலும் இந்த ராசிகளின் தனிச்சிறப்பை இங்குக் காணலாம்.
மகர ராசிக்காரர்கள் எப்போதும் பளபளப்பான முகத்தோற்றத்தைக் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்களின் சிந்தனையே கொஞ்சம் வேறுவிதத்தில் இருக்கும், ஆனால் பார்ப்பவர்களை நிச்சயம் ஈர்த்துவிடுவார்கள்.
ஆடம்பர வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறப்பான ராசிக்காரர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதும் பணத்தைத் தண்ணீர் போல் செலவு செய்துவிடுவர்.
மிதுன ராசிக்காரர்கள் அதிகப் படைப்பாற்றல் மிக்கவர்கள் மற்றும் புதிய விஷயங்களை முயல விரும்புவதில் கவனம் செலுத்தக்கூடிய ராசிக்காரர்கள்.
கும்ப ராசிக்காரர்கள் தனிப்பட்ட போக்கில் செயல்படுவார்கள். வழக்கமாக இல்லாத வேறுவித சிந்தனை இவர்கள் மனதில் எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கும்.
தனுசு ராசிக்காரர்கள் தன் போக்கில் ஒரு ஸ்டைலான திறமையையும் , அழகையும் கவனித்துக் கொள்வார்கள். மற்றவர்களைவிட உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று முற்போக்கு சிந்தனையைக் கொண்டவர்கள்.
ரிஷப ராசிக்காரர்கள் சுய மரியாதையைத் தக்க வைப்பார்கள். இவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்காகப் பணத்தை அதிகம் செலவிடுபவர்கள்.
துலாம் ராசிக்காரர்கள் கம்பீரமான தைரியம் கொண்டவர்கள், மேலும் இவர்கள் எளிய விஷயங்களை அழகாக மாற்றக்கூடிய சக்தி ஆற்றல் படைத்தவர்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் திறமைப்படைத்தவர்கள்.மேலும் இவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். தங்கள் மீது ஒரு பார்வையை ஏற்படுத்தும் ஈர்க்கக்கூடிய ராசிக்காரர்கள்.
பொறுப்பு துறப்பு: வாசகர்களே, இது பொதுவான நம்பிக்கைகள் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் உறுதிசெய்யவில்லை.