ஆதார் அட்டை குறித்த சூப்பர் செய்தி: அதிகரிக்கின்றன ஆதார் சேவை மையங்கள்

Aadhar Latest News: ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நாடு முழுவதும் 166 ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு மையங்களைத் திறக்கத் தயாராகி வருகிறது. இதுகுறித்து யுஐடிஏஐ அறிக்கை வெளியிட்டு தகவல் அளித்துள்ளது.  தற்போது, ​​166 ஆதார் சேவை மையங்களில் (ASKs) 55 மையங்கள் வருகின்றன. இது தவிர, 52,000 ஆதார் பதிவு மையங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள் ஆகியவை மாநில அரசுகளால் இயக்கப்படுகின்றன.

1 /5

UIDAI வெளியிட்டுள்ள அறிக்கையில், 122 நகரங்களில் 166 ஒற்றை ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு மையங்களைத் திறக்க UIDAI திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆதார் சேவை மையங்கள் வாரத்தில் ஏழு நாட்களும் திறந்து வைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத் திறனாளிகள் உட்பட 70 லட்சம் பேரின் தேவைகளை ஆதார் மையங்கள் பூர்த்தி செய்துள்ளன.  

2 /5

மாடல் A இன் ஆதார் சேவை மையங்கள் (Model-A ASKs) ஒரு நாளைக்கு 1,000 பதிவுகள் மற்றும் புதுப்பிப்பு கோரிக்கைகளைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளன. மாடல்-பி மையங்கள் (Model-B ASKs)500 மற்றும் மாடல்-சி மையங்கள் (Model-C ASKs) 250 பதிவு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கைகளை நிறைவேற்றும் திறனைக் கொண்டுள்ளன. இதுவரை UIDAI 130.9 கோடி பேருக்கு ஆதார் எண்ணை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3 /5

ஆதார் சேவை மையங்கள் பிரைவேட் லிமிடடாக கிடைப்பதில்லை என்பதை மனதில் கொள்ளவும். அதாவது, வங்கிகள், தபால் நிலையங்கள், பொது சேவை மையம் (CSC), மாநில அரசு அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் UIDAI ஆல் இயக்கப்படும் ஆதார் சேவை மையம் ஆகியவற்றில் மட்டுமே ஆதார் சேவைகள் கிடைக்கும். இதைப் பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், அதை மாநில அரசாங்கத்தின் உள்ளாட்சி அதிகாரிகளிடமிருந்து பெறலாம் (இவர்களின் கீழ் ஆதார் மையங்கள் இயங்குகின்றன).

4 /5

UIDAI ஒரு சாமானியனுக்கு வழங்கும் ஆதார் தொடர்பான அதே சேவைகளை இன்டர்நெட் கஃபேக்கள் வழங்குகின்றன. ஆதார் அட்டையில், பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது பிற விவரங்களைத் திருத்துதல், புகைப்படம் மாற்றுதல், பிவிசி கார்டு அச்சிடுதல், பொதுவான ஆதார் அட்டை கேட்பது போன்ற வசதிகள் மட்டுமே உள்ளன.  

5 /5

ஆதாரில் ஏதேனும் திருத்தம் அல்லது PVC கார்டு பெறுவதற்கு UIDAI நிர்ணயித்த கட்டணம் ரூ. 50. ஆனால், இண்டர்நெட் கேஃபில் இதற்கு ரூ.70 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம், அந்த இணைய மையங்கள், ரூ.30 முதல் ரூ. 50 அல்லது சில சமயம் ரூ. 100 ரூபாய் வரை கூட இதுபோன்ற வேலைகளுக்கு சம்பாதிக்கிறார்கள்.