சார்... இந்த கிராமத்திற்கு போக கொஞ்சம் வழி சொல்ல முடியுமா..!!!

உலகின் மிக தனித்துவமான கிராமமாக விளங்கும் இதன் அனைத்து மக்களும் பூமிக்கடியில் வாழ்கின்றனர்.

டெல்லியின் கனாட் பிளேஸில் அமைந்துள்ள பாலிகா பஜார் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க கூடும். அங்கு சந்தை முழுவதும் பூமிக்கடியில் அமைந்திருக்கும், அதாவது அது ஒரு அண்டர் க்ரவுண்ட் மார்கெட். ஆனால் உலகில் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் வசிக்கும் அண்டர் கிரவுண்டில் வசிக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் அது உண்மை.

Image credit - Social Media

1 /5

அந்த தனித்துவமான கிராமத்தின் பெயர் தெற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள 'குபர் பேடி'. இந்த கிராமத்தின் மிக முக்கிய  அம்சம் என்னவென்றால், இங்குள்ள அனைத்து மக்களும் நிலத்தடியில் அமைந்துள்ள வீடுகளில் வாழ்கின்றனர். இந்த வீடுகள் வெளியில் இருந்து பார்க்கும்போது சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் உள்ளே சென்று பார்த்தால் அனைத்து வசதிகளையும் கொண்ட ஸ்டார் ஹோட்டல்களைப் போல இருக்கும்.  

2 /5

இந்த பகுதியில் பல ஓப்பல் சுரங்கங்கள் உள்ளன. இந்த ஓப்பல்களின் காலி சுரங்கங்களில் மக்கள்  வாழ்கின்றனர். ஓபல் ஒரு பால் நிற விலைமதிப்பற்ற கல். கூபர் பெடி உலகில் அதிக அளவில் ஓப்பல்  நிறைந்த  பகுதி என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்கே தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஓபல் சுரங்கங்களைக் கொண்டுள்ளது. Image credit - Social Media  

3 /5

குபேர் பேடியில் சுரங்கப் பணிகள் 1915 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. உண்மையில், இது ஒரு பாலைவன பகுதி, எனவே இங்கு வெப்பநிலை கோடையில் மிக அதிகமாகவும், குளிர்காலத்தில் மிகக் குறைவாகவும் இருக்கும். இதன் காரணமாக இங்கு வசிக்கும் மக்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், மக்கள் சுரங்க பணிகள் மேற்கொண்ட பிறகு காலியாக உள்ள குவாரிகளில் வசிக்கச் சென்றனர். Image credit - Social Media  

4 /5

குபார் பேடியின் இந்த நிலத்தடி வீடுகளுக்கு கோடையில் ஏ.சியோ அல்லது குளிர்காலத்தில் ஹீட்டர்களோ தேவையில்லை. இன்றும், இதுபோன்ற 1500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன, அவை பூமிக்கடியில் உள்ளன, மக்கள் இங்கு வசிக்கின்றனர். Image credit - Social Media  

5 /5

பூமிக்கடியில் கீழே கட்டப்பட்ட இந்த வீடுகளில் அனைத்து வகையான வசதிகளும் உள்ளன. பல ஹாலிவுட் படங்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டு வெளியான 'பிட்ச் பிளாக்' படப்பிடிப்பிற்கு பின்னர்,  இது இப்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது. மக்கள் இங்கு சுற்றுலாவிற்காக வருகிறார்கள்