உடல் பருமன் குறைய... கொழுப்பு கரைய... நீங்கள் கை விட வேண்டிய சில பழக்கங்கள்

சில காலை பழக்கங்கள், உங்கள் எடை இழப்பு முயற்சியை முழுமையாக வீண் அடித்து விடும். அதிலும் உடல் எடையை குறைப்பதில் காலை உணவு, மிக முக்கியம் என்று உணவியல் வல்லுநர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உடல் எடை அதிகரிப்பதற்கும் நமது உணவுப் பழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சில காலை உணவு பழக்கங்கள், உங்கள் ஆரோக்கியத்தை சீர்குலைத்து, உடல் பருமன் அதிகரிக்க வழி வகுக்கும்.

1 /8

உணவு முறை பற்றி வல்லுனர்கள் கூறும் அறிவுரையில் முக்கியமான ஒன்று, காலையில் அரசனைப் போல் சாப்பிடு, மதியம் மற்றும் இரவில் ஏழையைப் போல் சாப்பிடு என்பதுதான். அன்றைய நாளுக்கான ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் காலை உணவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

2 /8

உடல் எடையை குறைக்க நினைக்கும் சிலர், காலை உணவை தவிர்க்கும் பழக்கம் உள்ளது. அலுவலகத்துக்கு கிளம்பும்போது, பல் துலக்குதல் குளித்தல், நன்றாக ஆடை அணிந்து கொள்ளுதல், ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு, நேரமில்லை என்று, காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். இது ஆரோக்கியத்தை பாதிப்பதோடு உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

3 /8

சாப்பிடுவதில் காட்டும் அவசரம்: நேரம் இல்லை என்று அவசரம் அவசரமாக சாப்பிடும் பழக்கம் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். மெதுவாக உணவை மென்று சாப்பிட்டால் தான், வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். இல்லை என்றால் மீண்டும் மீண்டும் பசி உண்டாகும். அதோடு உமிழ்நீர் நன்றாக கலந்து செரிமானம் சிறப்பாக நடக்க, உணவை நிதானமாக மென்று சாப்பிட வேண்டும்.

4 /8

அதிக அளவிலான சர்க்கரை: பலருக்கு சர்க்கரை கலந்த ரெட்டி டு ஈட் தானிய வகைகளை சாப்பிடும் பழக்கம் உள்ளது. அதோடு சிலர் அதிக இனிப்பு உள்ள பழ ஜாமுடன், பிரட் எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. அதிக சர்க்கரை கலந்த, செயற்கைப் பழ பானங்களை எடுத்துக் கொள்வார்கள். இவை அனைத்துமே உடல் பருமனை அதிகரிக்க வகை செய்யும் உணவுகள்.

5 /8

கஃபின் நிறைந்த உணவுகள்: பலருக்கு காலை எழுந்தவுடன் காபி குடிக்கும் வழக்கம் இருக்கும். இது தவிர பசி எடுக்கும் போதெல்லாம், சாப்பிடாமல் காபி டீ குடித்து காலம் தள்ளுபவர்கள் பலர் இருப்பார்கள். இவை அனைத்துமே, உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். அதோடு நம்மை அறியாமல், அதிகம் சாப்பிட வழி வகுக்கும்.

6 /8

பதப்படுத்தப்பட்ட உணவுகள்: நேரம் இல்லை என்ற காரணம் காட்டி, பலர் பதப்படுத்தப்பட்ட உணவுகள், உறைய வைக்கப்பட்ட உணவுகள், ரெடிட் வகை உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவார்கள். இதை தவிர்த்து பிரெஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிப்பது நல்லது.

7 /8

புரதச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்தல்: உடல் எடையை குறைக்க புரதச்சத்து நிறைந்த உணவுகள் மிக அவசியம். புரதச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பதால் உடல் சோர்வு அதிகம் இருப்பதோடு, வளர்ச்சிதை மாற்றமும் மந்தமாகிவிடும். இதனால் உடல் எடை இழப்பு சாத்தியம் ஆகாது.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.