செவ்வாய் கிரகத்தில் ஒரு Selfie; ஹெலிகாப்டருடன் செல்பி எடுத்த நாசா விண்கலம்

நாசா விண்கலத்துடன் இன்ஜெனியூனிட்டி (Ingenuity) என்ற சிறிய ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் சுமார் 31 நாட்கள் செவ்வாய் கிரகத்தில் பறந்து பல விதமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என நாசா தெரிவித்திருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 8, 2021, 02:51 PM IST
  • செவ்வாய் கிரகத்தில் நாசாவின் விண்கலம் ஹெலிகாப்டருடன் செல்பி எடுத்துள்ளது
  • இந்த படத்தில் செவ்வாய் கிரக ஹெலிகாப்டர் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்திடம் இருந்து சுமார் 4 மீட்டர் தொலைவில் காணப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் ஒரு Selfie; ஹெலிகாப்டருடன் செல்பி எடுத்த  நாசா விண்கலம்  title=

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு  உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  

இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசா (NASA) பெர்சவரன்ஸ் ரோவர்  (Perseverance Rover) என்ற விண்கலத்தை அனுப்பியது. கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இந்த விண்கலம் ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது.

அந்த விண்கலத்துடன் இன்ஜெனியூனிட்டி (Ingenuity) என்ற சிறிய ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் சுமார் 31 நாட்கள் செவ்வாய் கிரகத்தில் பறந்து பல விதமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என நாசா தெரிவித்திருந்தது.

நாசா அனுப்பிய இந்த ஹெலிகாப்டர் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தில் இருந்து பிரிந்து, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி மனித குல வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தியது.

ALSO  READ | வரலாறு படைத்துள்ள NASA; Ingenuity ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

செவ்வாய் கிரகத்தில் (ஏப்ரல் 6, 2021) 46 வது செவ்வாய் நாளில்  பெர்சவரன்ஸ் ரோவர்  (Perseverance Rover) முதல்  செல்பி எடுத்து அனுப்பியுள்ளது .செவ்வாய் கிரக ஹெலிகாப்டர் இந்த படத்தில்  பெர்சவரன்ஸ் ரோவர்   விண்கலத்திடம் இருந்து சுமார் 4 மீட்டர் தொலைவில் காணப்படுகிறது.

ரோவரின் ரோபோ கையில்  அமைந்துள்ள ஷெர்லாக் (ராமன் அண்ட்  லுமினென்சென்ஸ் ஃபார் ஆர்கானிக்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ்) (SHERLOC -Scanning Habitable Environments with Raman and Luminescence for Organics and Chemicals) கருவியின் ஒரு பகுதியான வாட்சன் (WATSON - Wide Angle Topographic Sensor for Operations and engineering)(செயல்பாடுகள் மற்றும் பொறியியலுக்கான பரந்த ஆங்கிள் டோபோகிராஃபிக் சென்சார்) கருவியின் மூலம் இந்த செல்பி படத்தை எடுத்துள்ளது.

ALSO READ | நாசாவின் Perseverance Rover செவ்வாய் கிரகத்தில் வானவில்லை படம்பிடித்ததா

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News