மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம். நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி என்றேல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த துளசி வகைகள் அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும்.
துளசியின் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று. துளசி இலைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. துளசி டீயை தினமும் குடிப்பதன் மூலம் ஆரோக்கியம் பெருமளவில் அதிகரிக்கும் என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. தினமும் காலையில் துளசி நீர் குடிக்கத் தொடங்கினால், ஒரு மாதத்திற்குள் நீங்கள் தானாகவே உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்களை உணரத் தொடங்குவீர்கள்.
இதய ஆரோக்கியம்
துளசி இலை டீ உங்கள் இதய ஆரோக்கியத்தை வலுவாக வைத்திருப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இந்த இயற்கை பானத்தை தொடர்ந்து குடிப்பதால், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கொல்ஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டும். எனவே, இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.
குடல் ஆரோக்கியம்
துளசி நீர் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதிலும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் செரிமானத்தை மேம்படுத்தும் திறன் உள்ளது.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை சூப்பராய் குறைக்கும் சுரைக்காய் சாறு.... இப்படி குடித்தால் போதும்
நோய் எதிர்ப்பு சக்தி
சளி மற்றும் இருமலால் அவதிப்படுபவர்கள் துளசி இலை டீயுடன் து தங்கள் நாளைத் தொடங்க வேண்டும். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த துளசி நீர், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும். துளசி இலை டீயை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலமும் உங்கள் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களையும் நீக்கலாம்.
வாய் துர்நாற்றம்
நாள்தோறும் துளசி டீ பருகி வருவதால் குடல் புண், வாய் புண் உள்ளிட்டவை வராமல் தடுக்கப்படும். வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் துளசி டீயை குடித்தால் வாய் மணக்கும். உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி மிகவும் நல்லது.
துளசி டீ தயாரிப்பது எப்படி?
துளசி தண்ணீர் தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இப்போது துளசி இலைகளை நன்கு கழுவி, அவற்றை இந்த தண்ணீரில் போடவும். இந்த தண்ணீரை 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து ஒரு கோப்பையில் வடிகட்டவும். நல்ல பலனைப் பெற, துளசி இலை டீயில் சுத்தமான தேன் கலந்தும் சாப்பிடலாம்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ