Union Budget 2025: பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டுக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கூட்டணி அரசாங்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்து, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, இந்தியாவின் பொருளாதார நிலையையில் உள்ள ஏற்ற இறக்கங்களை சமநிலைப்படுத்தி, அனைவருக்கும் ஏற்ற ஒரு பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் சிக்கலான பொறுப்பைக் கொண்டுள்ளார்.
Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்
இந்த பட்ஜெட் குறித்து பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. குறிப்பாக, ஏற்கனவே மோடி அரசாங்கம் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் சிலவற்றை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் முக்கிய தேசிய திட்டங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தலாம் என நிதி அமைச்சக வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. 2025 பட்ஜெட்டில் அதிக சலுகைகள் மற்றும் மேம்படுத்தல்களை பெறக்கூடிய சில முக்கிய திட்டங்கள் பற்றி இங்கே காணலாம்.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம் (APY)
தற்போது, அடல் பென்ஷன் திட்டத்தில் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை உள்ளது. பயனாணிகளுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது அவர்களது பங்களிப்பைப் பொறுத்தது. ஓய்வூதியத் தொகையின் வரம்பை அரசு இப்போது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தும் திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
Ayushman Bharat: ஆயுஷ்மான் பாரத் (PMJAY)
பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) ஒரு முக்கிய சுகாதார பாதுகாப்பு திட்டமாகும். குறிப்பாக தொற்றுநோய்க்குப் பிறகு, சுகாதாரப் பராமரிப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீட்டை விரிவுபடுத்தலாம். சமீபத்தில், மத்திய அரசு 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரையும் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்தது. அதிக ஒதுக்கீடு அதிக குடும்பங்களைச் சேர்க்க அனுமதிக்கும்.
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா
பட்ஜெட் 2025 -இல் விவசாயிகள் நலனுக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மலிவான நீண்ட கால கடன், வரிச்சலுகைகள் ஆகியவற்றுடன் PM Kisan திட்டத்தின் ஆண்டு தொகையை அரசு ரூ.6,000 லிருந்து ரூ.12,000 ஆக அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
PM Awas Yojana: பிரதமர் ஆவாஸ் யோஜனா (PMAY)
முக்கிய வீட்டுவசதி திட்டமான PMAY, அரசாங்கத்தின் நலத்திட்டங்களில் தொடர்ந்து முக்கிய திட்டமாக இருந்து வருகிறது. 2024 பட்ஜெட்டில், இந்தத் திட்டத்திற்காக ரூ.10 லட்சம் கோடி முதலீடு அறிவிக்கப்பட்டது. 10.1 மில்லியன் யூனிட்டுகள் நகர்ப்புற வீட்டுவசதி பற்றாக்குறை மற்றும் டயர்-1 மற்றும் டயர்-2 நகரங்களில் அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்த பட்ஜெட்டிலும் நகர்ப்புற வீட்டுவசதிக்கான ஒதுக்கீட்டில் மேலும் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மலிவு விலை வீட்டுவசதிக்கான கூடுதல் மானியங்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட கடன் செயல்முறைகள் ஆகியவை அடங்கும்.
PM Gram Sadak Yojana: PM கிராம் சடக் யோஜனா (PMGSY)
கிராமப்புற சாலை இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட PMGSY திட்டத்திற்கு, 2025 பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க நிதி அதிகரிப்பு இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அரசாங்கத்தின் உத்வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், தொலைதூர கிராமங்களை இணைப்பதற்கும் ஏற்கனவே உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கும் புதிய இலக்குகள் அமைக்கப்படலாம். கடந்த ஆண்டு, இந்தத் திட்டம் ரூ.16,100 கோடியைப் பெற்றது, இது முந்தைய ஆண்டை விட 10% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
MSME: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்
MSME -கள் இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன. 2025 பட்ஜெட்டில் இந்தத் துறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்படும் என நம்பப்படுகின்றது. கடன் உத்தரவாதங்களில் மேம்பாடுகள், குறைந்த கடன் வட்டி விகிதங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை ஆதரிப்பதற்கான முயற்சிகள் ஆகியவை அறிவிக்கப்படலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ