Union Budget 2025: இன்னும் சில நாட்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். வழக்கத்தை போலவே இந்த பட்ஜெட் குறித்தும் மக்களிடையே பலதரப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன. வர்த்தகர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், மூத்த குடிமக்கள், சம்பள வர்க்கம் என அனைத்து தரப்பினரும் தங்களுக்கான பிரத்யேக அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.
Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்
பொதுவாக, பட்ஜெட்டில் பல வித அத்தியாவசிய, ஆடம்பர பொருட்கள், சேவைகள் ஆகியவற்றின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. விலை குறைப்பில் மக்கள் அதிக ஆர்வத்துடன் கவனிக்கும் விஷயங்களில் தங்கத்தின் விலையும் ஒன்று. இந்த பட்ஜெட்டிலும் தங்கம் விலை குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. எனினும், தங்கத்தின் விலை மாற்றம் பல வெளிநாட்டு காரணிகளையும் சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, சமீபத்தில், ஜனவரி 20 ஆம் தேதி திங்கட்கிழமை அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நாளை முன்னிட்டு இந்தியாவில் தங்கத்தின் விலைகள் அதிகரித்தன. ஜனவரி மாதத்தில் இதுவரை, தங்கத்தின் விலைகள் 24 மற்றும் 22 கேரட்டுக்கு சுமார் 4.20% வரை உயர்ந்துள்ளன. டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் உலகளவில் சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Import Duty on Gold
எனினும், இந்தியாவை பொறுத்தவரை, வரவிருக்கும் மத்திய பட்ஜெட் 2025 -இல் வெளிவரக்கூடும் அறிவிப்புகள், இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்படக்கூடிய தாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். தங்கம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் மீதான இறக்குமதி வரியில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பெரும்பாலான நிபுணர்கள் நம்புகின்றனர்.
2024 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை உயர்ந்ததன் காரணம் என்ன?
2024 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலைகள் உயர்ந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் முக்கிய காரணங்களில் ஒன்று, ஜூலை 2024 இல் ஏற்பட்ட சுங்க வரி குறைப்பாகும். பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் 2025 நிதியாண்டு பட்ஜெட் அறிவிப்பில், தங்கம் மற்றும் வெள்ளி பார்கள் மீதான சுங்க வரியை 60% குறைத்தது. இதன் காரணமாக இது முன்னர் இருந்த 15% இலிருந்து 6% ஆனது.
2024 இல் புதிய உச்சங்களை தொட்ட தங்கம்
2024 ஆம் ஆண்டில் மட்டும், தங்கம் 25% உயர்ந்து குறைந்தது 40 புதிய சாதனை உச்சங்களை முறியடித்தது. அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், நாணய மதிப்புக் குறைவு மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பாக தங்கம் கருதப்படுவதால், மூன்றாவது காலாண்டில் மொத்த தங்கத் தேவை முதல் முறையாக $100 பில்லியனைத் தாண்டியது.
2025 தொடக்கம் தங்க சந்தைக்கு எப்படி இருந்தது?
ஜனவரி மாத தொடக்கமும் நேர்மறையாகவே இருந்தது. இந்தியாவில் தங்கம் ஜனவரி 20 ஆம் தேதி அதிகபட்ச விலையாக 24 கேரட் 10 கிராம் தங்கம் ரூ.81,230 ஆகவும், 22 கேரட் 10 கிராம் தங்கம் ரூ.74,500 ஆகவும் இருந்தது. ஜனவரி தொடக்கத்தில் தங்கத்தின் விலை 10 கிராம் 24 கேரட்டுக்கு ரூ.78,000 ஆகவும், 22 கேரட்டுக்கு ரூ.71,500 ஆகவும் இருந்தது. இதுவரை, விலைகள் குறைந்தது 4.2% உயர்ந்துள்ளன.
ஜனவரி 20 ஆம் தேதி, டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில், 24K தங்கத்தின் விலை 100 கிராமுக்கு ரூ.1,200 அதிகரித்து ரூ.8,12,300 ஆகவும், 10 கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.81,230 ஆகவும் இருந்தது. 22K 100 கிராம் தங்கத்தின் விலை 100 கிராமில் ரூ.1,500 அதிகரித்து ரூ.7,45,000 ஆகவும், 10 கிராமுக்கு ரூ.150 அதிகரித்து ரூ.74,500 ஆகவும் இருந்தது.
சமீபத்திய போக்கு எப்படி உள்ளது?
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மிக அதிக ஏற்ற இறக்கத்துடன் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு உரைக்கு முன்னதாக உலக நிதிச் சந்தைகளில் நிலவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க வேலையின்மை க்ளெய்ம்களின் அதிகரிப்பு ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளி விலைகளை ஆதரித்ததாக கூறப்படுகின்றது.
Budget 2025: பட்ஜெட்டில் தங்கச் சந்தைக்கான எதிர்பார்ப்புகள் என்ன?
- 2024 மத்திய பட்ஜெட்டில் தங்க இறக்குமதி வரி குறைக்கப்பட்ட பிறகு நகைகளுக்கான தேவை வலுப்பெற்றுள்ளது.
- ஆகையால், மோடி 3.0 இன் முதல் முழு பட்ஜெட்டில், நகைகளுக்கான நுகர்வோர் தேவையை அதிகரிக்கவும், அதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கவும் நகைத் துறை கொள்கை தொடர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
- விலைமதிப்பற்ற நகைகளுக்கான தேவையை அதிகரிக்க, செலவழிக்கக்கூடிய வருமானம் மற்றும் நுகர்வை அதிகரிக்க வரி நிவாரண நடவடிக்கைகளை பட்ஜெட் முன்மொழிய வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
- நுகர்வு மீதான பணவீக்க தாக்கத்தைக் கட்டுப்படுத்த சில மூலோபாய நடவடிக்கைகளும் தேவை.
- கூடுதலாக, தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை மக்கள் முன் இன்னும் கவர்ச்சிகரமான முறையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
- இந்த வழியில், செயலற்று வீடுகளில் தேங்கியுள்ள தங்கம் ஓர் இடத்தில் திரட்டப்படும்.
- அங்கீகரிக்கப்பட்ட மற்றும் புகழ்பெற்ற சில்லறை நகை வியாபாரிகளின் பங்கேற்பை எளிதாக்க, தற்போதுள்ள தங்க பணமாக்குதல் திட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்மொழியலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- சில்லறை நகைத் துறையில் கணக்கில் காட்டப்படாத வணிகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பட்ஜெட் அறிவிக்க வேண்டும்.
- தங்க விற்பனையாளர்கள் இந்த சந்தையில் ஒற்றை ஒழுங்குமுறை ஆணையத்தை எதிர்பார்க்கிறார்கள்.
- புல்லியன் ரிஃபைனர்கள் கடந்த சில ஆண்டுகளாக 0.65% என்ற மிகக்குறைந்த லாபத்தில் செயல்பட்டு வருகின்றனர். இந்த லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
மேலும் படிக்க | Budget 2025: பட்ஜெட்டில் அட்டகாசமான அறிவிப்பு, இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ