ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நஸ்ரியாவின் சூக்ஷ்மதர்ஷினி!

Sookshmadarshini OTT Release: நஸ்ரியா மற்றும் பாசில் ஜோசப் இணைந்து நடித்துள்ள சூக்ஷ்மதர்ஷினி படம் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Written by - RK Spark | Last Updated : Jan 21, 2025, 11:48 AM IST
  • டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “சூக்ஷ்மதர்ஷினி”.
  • நஸ்ரியா மற்றும் பாசில் ஜோசப் நடித்துள்ளனர்.
  • மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நஸ்ரியாவின் சூக்ஷ்மதர்ஷினி! title=

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த "சூக்ஷ்மதர்ஷினி" எனும் அட்டகாசமான ஃபேமிலி டிராமா திரில்லரை கடந்த ஜனவரி 11 முதல் ஸ்ட்ரீம் செய்து வருகிறது. நஸ்ரியா நடிப்பில் உருவான இந்த மிஸ்டரி த்ரில்லர் திரைப்படம் அதுல் ராமச்சந்திரன் மற்றும் லிபின் டி.பி. எழுத்தில், எம்.சி. ஜித்தின் இயக்கத்தில், ஹாப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஏவிஏ புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.  

மேலும் படிக்க | இயக்குனர் கௌதம் மேனனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகை  நஸ்ரியா நஜிம்

முன்னணி நடிகை  நஸ்ரியா நஜிம், சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.   பாசில் ஜோசப், அகிலா பார்கவன், மெரின் பிலிப், பூஜா மோகன்ராஜ், சித்தார்த் பரதன், தீபக் பரம்போல், மனோஹரி ஜாய், அபிராம் ராதாகிருஷ்ணன், ஜனனி ராம் (டயானாவாக), ஹெஸ்ஸா மேஹக் மற்றும் சரஸ்வதி மேனன் உட்பட ஒரு பெரும் நட்சத்திரம் கூட்டம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

பேமிலி என்டர்டெயினர்

கிறிஸ்டோ சேவியரின் இசையில், சமன் சாக்கோவின் படத்தொகுப்பில், சூக்ஷ்மதர்ஷினி ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படம்  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்பான ஃபேமிலி டிராமா திரில்லரைத் தவறவிடாதீர்கள். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் சூக்ஷ்மதர்ஷினி பார்த்துக் கொண்டாடுங்கள்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

மேலும் படிக்க | 55 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத எஸ்.ஜே.சூர்யா! காரணம் இதுதானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News