இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவருக்கும் ஒரு வங்கி கணக்கு இருக்கும். வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள், தங்கள் பணத்தை அதில் சேமித்து வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து நேரடியாக பணத்தை சில காரணங்களுக்கு எடுத்து கொள்கின்றன. ஒரு சிலருக்கு எதற்காக பணத்தை எடுக்கிறார்கள் என்பது கூட புரியாது. வங்கி வாடிக்கையாளர்களில் ஒரு சிலர் மட்டுமே இந்த செயல்முறைகளை பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். இது தவிர, பல்வேறு வகையான டெபிட் கார்டுகளை வங்கி வழங்குகிறது. இதற்காக மாதாந்திர அல்லது வருடாந்திர கட்டணங்களை வங்கிகள் எடுத்து கொள்கின்றன.
மேலும் படிக்க | இந்த 5 பரிவர்த்தனைகளை செய்யாதீர்கள்! உன்னிப்பாகக் கண்காணிக்கும் வருமான வரித்துறை
பாரத ஸ்டேட் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி (SBI), தற்போது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு இயக்கி வருகிறது. அரசு ஊழியர்கள் தொடங்கி, தொழில் செய்பவர்கள் வரை பலரும் எஸ்பிஐ வங்கியை பயன்படுத்துகின்றனர்.எஸ்பிஐ டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருந்து கொண்டே வங்கி தொடர்பான வேலைகளை முடிக்கலாம். டிஜிட்டல் சேவைகளை நவீனமயமாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது எஸ்பிஐ. YONO மூலம் அதன் வங்கிச் சேவைகளை தீவிரமாக மேம்படுத்தி வருகிறது. டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சங்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
டெபிட்/கிரெடிட் கார்டு
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தாங்கள் வைத்திருக்கும் குறிப்பிட்ட கார்டின் அடிப்படையில் மாறுபட்ட கட்டணங்களை எதிர்பார்க்கலாம். உதாரணமாக கிளாசிக், சில்வர் மற்றும் குளோபல் கான்டாக்ட்லெஸ் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.236 வசூலிக்கப்படும். அதே வேளையில், பிரீமியம் டெபிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் அதிக கட்டணங்களை எதிர்கொள்கின்றனர். யுவா/கோல்டு/காம்போ/மை கார்டு டெபிட் கார்டுகளுக்கு ரூ.250 மற்றும் ஜிஎஸ்டி, பிளாட்டினம் டெபிட் கார்டுகளுக்கு ரூ.325 மற்றும் ஜிஎஸ்டி, பிரைட்/பிரீமியம் பிசினஸ் டெபிட் கார்டுகளுக்கு ரூ.350 மற்றும் ஜிஎஸ்டி, மேலும் மற்ற சில பிரீமியம் கார்டுகளுக்கு ரூ.425 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகின்றன.
ரூபாய் 236 பிடித்தம் செய்யப்பட்டதா?
எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து 236 ரூபாய் பிடித்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எதற்காக இந்த பணம் எடுக்கப்பட்டது என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் உள்ளனர். பல வாடிக்கையாளர்கள் தங்களின் பாஸ்புக்குகளை மதிப்பாய்வு செய்யும் போது அவர்களின் கணக்குகளில் இருந்து ஏன் இந்தத் தொகைகள் கழிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள முயல்கின்றனர். எஸ்பிஐ டெபிட் கார்டுகளுக்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணமாக ரூ.200 வசூலிக்கிறது. ஆனால் ஏன் ரூ.200க்கு பதிலாக ரூ.236 கழிக்கப்படுகிறது என்ற கேள்வி இருக்கும். ஆண்டு பராமரிப்புக் கட்டணத்துடன் ஜிஎஸ்டியை சேர்க்கும்போது, மொத்தம் ரூ.236 (ரூ. 200 + ரூ.36) வருகிறது.
மேலும் படிக்க | EPFO ஊழியர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு.. நிர்மலா சீதாராமன் உறுதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ