மண்புழுக்கள் உட்பட உலகில் உள்ள பல்வேறு வகையிலான புழுக்களும் பூமியில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு காரணமாக இருக்கின்றன என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம்.
உண்மையில், மனிதர்களே இந்த பூமிக்கு முக்கியமானவர்கள், அவர்களாலேயே பூமி நிலைத்து இருக்கிறது என்றும் பலர் தவறாகக் கருதிக்கொள்கிறார்கள். ஆனால் புழு-பூச்சிகள் இந்த உலகில் இல்லையென்றால் உலகத்தில் மனிதர்கள் வாழமுடியாது என்பதே உண்மை.
இது அறிவியலாளர்களுக்கு நன்றாகவேத் தெரியும். அவர்கள், உலக உயிரினங்கள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் புழு முடிவெடுக்கும் திறனைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவு ஆச்சரியமானதாக இருக்கிறது.
மேலும் படிக்க | மூளை நரம்பு பாதிப்பின் அறிகுறிகள்
புழுக்களால் சுயமாக முடிவெடுக்க முடியும் என்பது மிகவும் வியப்பான உண்மை. சரிபார்க்க, விஞ்ஞானிகள் நியூட்ரான்கள் மூலம் தூண்டுதல்கள் எவ்வாறு பயணிக்கின்றன என்பதைப் பற்றிய மிக விரிவான ஆய்வை நடத்தினார்கள். ஆனால் அதோடு புழுக்களின் நடத்தையும் அவதானிக்கப்பட்டது.
இரவு உணவிற்கு என்ன சாப்பிடுவது என்பது முதல், விருந்துக்கு உடுத்திக்கொண்டு போக எந்த உடை உகந்தது என மனிதர்களுக்கு பலவிதமான குழப்பங்கள் இருந்தாலும், பல விஷயங்களை யோசித்து முடிவெடுக்கிறோம் அல்லவா?
அதேபோல, ஒரு புழு, மனிதர்களை விட வெற்றிகரமான முடிவுகளை எடுத்துவிடுமாம்! மனிதர்களுக்கு பில்லியன் கணக்கான நியூரான்கள் உள்ளன என்பதும், புழுவுக்கு வெறும் 302 நியூரான்கள் மட்டுமே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
புழுக்களின் முடிவெடுக்கும் திறன் தொடர்பான ஆய்வை, கலிபோர்னியாவில் உள்ள உயிரியல் ஆய்வுகளுக்கான சால்க் இன்ஸ்டிடியூட் (Salk Institute for Biological Studies) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். அவர்கள் P pacificus எனப்படும் புழுவை (predatory worm) ஆய்வு செய்தனர்.
புழுவின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. புழு தனது உணவைக் காப்பாற்ற எப்போது கடிக்கிறது அல்லது போட்டியாளரைக் கொல்ல எப்போது கடிக்கும் என்பதும் பார்க்கப்பட்டது.
புழுவின் முடிவெடுக்கும் திறனைச் சரிபார்க்க, விஞ்ஞானிகள் நியூட்ரான்கள் வழியாக தூண்டுதல்கள் எவ்வாறு பயணிக்கின்றன என்பதைப் பற்றிய மிக விரிவான ஆய்வை விட அதன் நடத்தையை அதிகம் நம்பினர்.
மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தி உணவு குறித்து நிபுணர்கள்
சி எலிகன்ஸ் தொடர்பாக பி பசிஃபிகஸின் நடத்தை ஆய்வு செய்யப்பட்டது. சி எலிகன்ஸ் பி பசிஃபிகஸின் போட்டியாளர் மற்றும் அதன் இரையாகும்.
எளிதில் வெல்லக்கூடிய லார்வா சி எலிகன்களை எதிர்கொள்ளும் போது, பி பசிஃபிகஸ் கடித்து விழுங்குவதைக் காண முடிந்தது. ஆனால் முழு வளர்ச்சியடைந்த சி எலிகன்ஸ் அதன் உணவைத் திருட முயன்றபோது, அதைத் தடுக்க P pacificus கடித்தது.
சால்க் இன்ஸ்டிட்யூட்டின் இணையதளத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி, "இலக்கை இயக்கும் முடிவெடுப்பது போன்ற சிக்கலான ஒன்றைப் படிக்க புழு போன்ற எளிய அமைப்பை நீங்கள் பயன்படுத்தலாம் என்று எங்கள் ஆய்வு காட்டுகிறது" என்று நரம்பியல் நிபுணர் ஸ்ரீகாந்த் சலசானி (neurobiologist Sreekanth Chalasani) கூறுகிறார்.
"மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய முடிவை, நடத்தை நிறைய சொல்ல முடியும் என்பதையும் நாங்கள் நிரூபித்தோம்" என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | மூளை சுறுசுறுப்பாக செயல்பட வேண்டுமா? நிபுணர்களின் அட்வைஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR