'ரோஜா' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகி தேசிய விருதை பெற்றவர் நடிகர் அரவிந்த்சாமி. இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார்.
சில ஆண்டு காலம் நடிப்புக்கு இடைவெளி விட்ட இவருக்கு இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் படம் ரீஎண்ட்ரி கொடுத்தது. அந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளிவந்தது. இப்படத்திற்காக வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், இவருடைய மகன் ருத்திரசாமி ஐபி ப்ரோகிராம் பட்ட படிப்பில் தேர்ச்சி அடைந்துள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்த அரவிந்த்சாமி யாரும் எதிர்பாரதவிதமாக தன் மகனின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது, அரவிந்த்சாமியின் ட்விட்டர் பதிவுக்கு ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Proud of my son who graduated today from his IB program. I wish you the very best as I do all others who hv reached this milestone . May you lead your life with integrity, happiness, love and peace. Be useful to the world around you. Dream big and know that it is always possible. pic.twitter.com/SOlL46G3JR
— arvind swami (@thearvindswami) May 19, 2018