BMW காரை “கைது” செய்த விவசாயி; சமூக ஊடகத்தில் வைரலாகிய போட்டோ

பி.எம்.டபிள்யூ ஓட்டி வந்த நபர்  தனது காரை தனது வயலுக்கு செல்லும் பிரதான சாலையில் குறுக்கே நிறுத்தி விட்டு, அந்த இடத்தை சுற்றி பார்க்க சென்றதால், விவசாயி கோபம் அடைந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 1, 2021, 07:42 PM IST
  • இங்கிலாந்தின் வேல்ஸில் தான் இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
  • கார் உரிமையாளரை பழிவாங்கிய இந்த செயல் பிரிட்டன் முழுவதும் வைரலாகியது.
  • இந்த பகுதியில் சுற்றுலா முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.
BMW காரை “கைது” செய்த விவசாயி; சமூக ஊடகத்தில் வைரலாகிய போட்டோ  title=

ஒரு சுற்றுலாப் பயணி தனது BMW காரை வயலுக்கு செல்லும் பிரதான சாலையை அடைத்து கொண்டு,  குறுக்கே நிறுத்திவிட்டு சென்றதால் கோபமடைந்த விவசாயி, செய்த காரியம் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

இங்கிலாந்தின் வேல்ஸில்  தான் இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கோபமடைந்த விவசாயி ஒருவர், வாகனத்தின் ஓட்டுநரைப் பழிவாங்குவதற்காக அவரது பிஎம்டபிள்யூ (BMW) காரைச் சுற்றி இரும்பு வேலி போட்டு சிறையில் அடைத்தார். 

பி.எம்.டபிள்யூ ஓட்டி வந்த நபர்  தனது காரை தனது வயலுக்கு செல்லும் பிரதான சாலையில் குறுக்கே நிறுத்தி விட்டு, அந்த இடத்தை சுற்றி பார்க்க சென்றதால், விவசாயி கோபம் அடைந்தார்.

ALSO READ | அதிர்ச்சி தகவல்: 30 ஆண்டுகளாக வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் பெண் 

விவசாயிக்கு வயலில் இருந்து வெளியேற வழி கிடைக்காததால் கோபம் அடைந்து, ​​BMW  காரின் ஓட்டுநருக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தார். அவர் இரும்பு மற்றும் எஃகு குழாய்களை தயார் செய்து காரைச் சுற்றி வேலை அமைத்து,  காரை சிறையில் அடைத்தார். கார் உரிமையாளரை பழிவாங்கிய இந்த செயல்  பிரிட்டன் முழுவதும் வைரலாகியது. இருப்பினும் சம்பவத்திற்கு பின்னர் போவிஸ் கவுண்டி கவுன்சில் இந்த இரும்பு வேலியை அங்கிருந்து அகற்றியது.

வேல்ஸில் உள்ள லாங்கோர்ஸைச் சேர்ந்த கவுன்சிலர் எமிலி டூரண்ட் கூறுகையில், இப்பகுதியில் உள்ள மக்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு மதிப்பளித்து வரவேற்கின்றனர். இந்த பகுதியில் சுற்றுலா  முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது, ஆனால் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இந்த விவசாயிகளின் வயல்கள் ஒரு வேடிக்கையான இடம் அல்ல, இதுபோன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறினார். சுற்றுலா வரும் பயணிகள், வயலுக்கு, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்வது ​​கண்டிக்கத்தக்கது என்று அவர் மேலும் கூறினார்.

பண்ணையின் பிரதான சாலைக்கு முன்னால், வழியை அடைத்துக் கொண்டு காரை நிறுத்தினால், விவாயிக்கு அங்கு செல்வதும், கடினம்.  இதனால், சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

ALSO READ | X-ray கொடுத்த ஷாக்... பிறப்பில் தான் ஆண் என்பதை அறிந்த மணமான பெண் அதிர்ச்சி..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News