கடற்கரையில் வீடு இருந்தால் சுகமாக இருக்கும் என்று நினைப்பது தவறு என்று நிரூபிக்கிறது ஒரு வைரல் வீடியோ.
இந்த வீடியோ, அமெரிக்காவில் வட கரோலினா கடற்கரையில் புயலின் போது நீரில் மூழ்கிய கடற்கரை வீட்டின் நிலையைக் காட்டுகிறது. இந்த வீடியோ வெளியாகி அதிர்வலைகளை எழுப்பி வைரலாகி வருகிறது.
ஆளில்லாத கடற்கரை வீடு கடலில் மூழ்குகிறது. மற்றொரு வீடு அங்கு இருப்பதை காண முடிகிறது. இரண்டும் ரோடந்தேவின் அவுட்டர் பேங்க்ஸ் சமூகத்தில் ஓஷன் டிரைவ் பகுதியில் அமைந்திருந்தன.
அமெரிக்க தேசிய பூங்கா சேவை, கடந்த செவ்வாய்கிழமை (மே 10) இரண்டு கடற்கரை வீடுகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதை உறுதிப்படுத்தியதோடு, அருகிலிருந்த பிற கடற்கரைப் பகுதிகளுக்கும் மக்கள் செய்வதற்குத் தடை விதித்தது.
மேலும் படிக்க | நாயை தூக்கிச்செல்லும் சிறுத்தை: திகிலூட்டும் சிசிடிவி காட்சிகள்
ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவில், வீட்டின் தூண்களை வலுவான அலைகள் இடித்துத் தள்ளுவதை காணமுடிகிறது.
அழகான கடற்கரை வீடு அட்லாண்டிக் பெருங்கடலில் மிதப்பதையும் இந்த வைரல் வீடியோ காட்டுகிறது. இந்த வீடியோ,14.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
வைரல் வீடியோவை பாருங்கள்:
அங்கிருந்த இரண்டு வீடுகளில் முதலில் விழுந்த வீட்டின் சிதைபாடுகள் பரவிக்கொண்டிருந்தது. சிதைபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபடுவது தொடர்பாக வீட்டு உரிமையாளருடன் நெருக்கமாக பணியாற்றிக் கொண்டிருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த ஆண்டில் இதற்கு முன்னதாகவும், ஒரு கடற்கரை வீடு இடிந்து விழுந்தது. பிப்ரவரி மாதம் Rodanthe இல் ஒரு வீடு இடிந்து விழுந்ததில், கடற்கரைகளில் பல மைல் பரப்பளவுக்கு இடிபாடுகள் பரவியது. பெரிய அளவிலான இடிபாடுகள் அகற்றப்பட்ட போதிலும், சிதைபாடுகள் இதுவரை முற்றிலுமாக அகற்றப்படவில்லை.
"துரதிர்ஷ்டவசமாக, எதிர்காலத்தில் =கடற்கரைகளில் இடிந்து விழும் வீடுகள் அதிகமாக இருக்கலாம்" என்று கிழக்கு வட கரோலினாவின் தேசிய பூங்காக்களின் கண்காணிப்பாளர் டேவிட் ஹாலாக் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
"முதல் வீடு இடிந்து விழுந்ததற்குப் பிறகு, ரோடந்தேவில் உள்ள ஓஷன் டிரைவில் உள்ள வீட்டு உரிமையாளர்களை நாங்கள் முன்கூட்டியே அணுகினோம், மேலும் கேப் ஹட்டெராஸ் நேஷனல் சீஷோர் இடிந்து விழுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தோம்."
மேலும் படிக்க | ஆட்டுக்குட்டிக்கும் தாய்ப்பால் கொடுக்கும் கோமாதாவின் அன்பு
வட கரோலினாவின் கடற்கரை கிட்டத்தட்ட முழுவதுமாக குறுகிய, தாழ்வான தடுப்பு தீவுகளால் ஆனது. ஹட்டெராஸ் தீவு வெளிப்புறக் கரைகள் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியாகும்.
நூற்றுக்கணக்கான விடுமுறை ரிசார்டுகள் இங்கே அமைந்துள்ளன, ஒருவேளை அவை இருந்திருக்கக்கூடாது என்று நிபுணர்கள் கூறும் இடங்களில் கட்டப்பட்டுள்ளன. இந்தத் தீவுகள் புயல் அலைகளால் பாதிக்கப்படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சியானது பிரச்சனையை இன்னும் மோசமாக்குகிறது, கடல் அரிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் அல்லது புயல்களால் அழிக்கப்பட்ட கரையோரங்களில் கட்டுமானங்கள் கட்டப்படுகின்றன.
கடல் மட்டம் உயரும்போது, பிரதான நிலப்பகுதியை நோக்கி நகர்கின்றன. செயற்கையான முறையில் அவற்றைப் தடுத்து வைப்பது நிலைமையிஐ மேலும் மோசமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இது சீறும் சிறுத்தையின் தாக்குதலா இல்லை நண்பனின் சீரியஸ் விளையாட்டா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR