Launch ஆனது FAU-G மொபைல் கேம்: இந்த இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்!!

FAU-G விளையாட்டு PUBG மொபைலின் இந்திய மாற்றாக கருதப்படுகிறது. ஆனால் இரண்டு விளையாட்டுகளுக்கும் இடையில் அதிக வித்தியாசங்கள் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 26, 2021, 04:21 PM IST
  • FAU-G விளையாட்டு லாஞ்ச் ஆகி விட்டது.
  • FAU-G ஒரு அதிரடி ஆக்ஷன் விளையாட்டாகும்.
  • கேம் டிசைனிங் நிறுவனமான nCore Games ஒரு ட்வீட்டில் விளையாட்டின் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
Launch ஆனது FAU-G மொபைல் கேம்: இந்த இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்!! title=

புதுடெல்லி: பல நாள் எதிர்பார்ப்புக்குப் பிறகு, புதிய FAU-G விளையாட்டு லாஞ்ச் ஆகி விட்டது. nCore Games இது குறித்த தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விளையாட்டின் பிராண்ட் தூதர் அக்‌ஷய் குமாரும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக இந்த விளையாட்டு அக்டோபரில் தொடங்கப்பட இருந்தது. ஆனால் நிறுவனத்தால் அப்படி செய்ய முடியவில்லை. இறுதியாக தற்போது FAU-G விளையாட்டு லாஞ்ச் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணிக்கு நடிகர் அக்‌ஷய் குமார் FAU-G விளையாட்டு வெளியீடு குறித்த தகவலை தெரிவித்தார். தனது ட்விட்டர் பக்கத்தில், அக்‌ஷய் குமார் FAU-G (Fearless And United Guards) எதிரிகளை எதிர்கொண்டு உங்கள் நாட்டிற்காக போராடுங்கள் என்று எழுதினார்.

கேம் டிசைனிங் நிறுவனமான nCore Games ஒரு ட்வீட்டில் விளையாட்டின் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. விளையாட்டைப் பதிவிறக்குவதற்கான இணைப்பையும் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

எப்படி பதிவிரக்கம் செய்வது

நீங்கள் FAU-G விளையாட்டைப் பதிவிறக்க விரும்பினால், இந்த இணைப்பைக் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம் - https://play.google.com/store/apps/details?id=com.ncoregames.faug

ALSO READ: FAU-G Republic Day ரிலீசா? கேமர்களுக்கிடையில் பரபரப்பு, பதிவிறக்கம் செய்யும் முழு விவரம் இங்கே!  

FAU-G என்றால் என்ன?

FAU-G என்பது Fearless and United Gaurds என்று பொருள்படும். அதாவது இது அச்சமற்ற மற்றும் ஒன்றிணைந்த வீரர்களின் விளையாட்டாகும். இந்த விளையாட்டு இந்திய நிறுவனமான nCore கேம்ஸ் உருவாக்கிய ஒரு அதிரடி ஆக்ஷன் விளையாட்டாகும். இந்த விளையாட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது (PUBG Mobile இன் தடைக்குப் பிறகு). இந்த விளையாட்டின் வருவாயில் 20 சதவீதம் 'பாரத் கே வீர்' அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்று நடிகர் அக்‌ஷய் குமார் (Akshay Kumar) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

விளையாட்டு கால்வன் பள்ளத்தாக்கு தாக்குதலை அடிப்படையாகக் கொண்டது

கடந்த ஆண்டு இந்திய மற்றும் சீன வீரர்களிடையே வன்முறை மோதல் நிலவிய கால்வன் (Galwan) பள்ளத்தாக்கை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டின் முதல் நிலை அல்லது முதல் கட்டம் இருக்கும் என்று என் கோர் விளையாட்டுகளின் இணை நிறுவனர் விஷால் கோண்டல் தெரிவித்தார். இருப்பினும், இந்த விளையாட்டு PUBG மொபைலின் இந்திய மாற்றாக கருதப்படுகிறது. ஆனால் இரண்டு விளையாட்டுகளுக்கும் இடையில் அதிக வித்தியாசங்கள் உள்ளன.

PUBG ஒரு பேட்டில் ராயல் விளையாட்டாக இருந்தது. ​​FAU-G ஒரு அதிரடி ஆக்ஷன் விளையாட்டாகும்.

ALSO READ: Missing Pub-G? கவலை வேண்டாம்! அக்ஷய் குமாருடன் அதிரடியாக களமிறங்கவுள்ளது Fau-G!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News