மேடையில் மணமகன் மடியில் விழுந்த நண்பன்! வைரல் வீடியோ!

திருமண விழா மேடையில் நடமாடுகையில் மணமகன் மடியில் நண்பன் தடுமாறி விழுந்த வீடியோ இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 29, 2022, 10:26 AM IST
  • திருமணங்களின் போது மணமக்களின் நண்பர்கள் நடனமாடும் கலாச்சாரம் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே மாறிவிட்டது.
  • அந்த உற்சாகத்தில் சில பல்ப் வாங்கும் சம்பவங்களும் சிலருக்கு நடந்து அது ட்ரெண்டாகி விடுகிறது.
மேடையில் மணமகன் மடியில் விழுந்த நண்பன்! வைரல் வீடியோ!  title=

திருமண நிகழ்ச்சிகளில் பொதுவாகவே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும்.  அதில் பலரும் அவ்வாறு திருமணங்களில் நடக்கும் சில வேடிக்கையான தருணங்களை பதிவு செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.  இப்போதெல்லாம் திருமணங்களின் (Marriage) போது மணமக்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மேடையில் ஏறி நடனமாடும் கலாச்சாரம் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே மாறிவிட்டது எனலாம்.  அவர்களுடன் இணைந்து மணமக்களும் நடனமாடி உற்சாகம் அடைகின்றனர். 

ALSO READ | பாய்ந்தது பாம்பு, பக்கத்தில் எலி, பலியானதா எலி? அங்கதான் ஒரு சின்ன ட்விஸ்ட்!!

அந்த உற்சாகத்தில் சில பல்ப் வாங்கும் சம்பவங்களும் சிலருக்கு நடந்து அது இணையவாசிகளை வெகு விரைவாக கவர்ந்து ட்ரெண்டாகி விடுகிறது.  அதுபோல ஒரு திருமண விழாவில் நடந்த சம்பவம் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.  இன்ஸ்டாகிராமில் (Instagram) divusharma _ 9 என்ற கணக்கில் அந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது. 

bride

அந்த வீடியோவில், மேடையில் மணமக்கள் அவர்கள் சோபாவில் அமர்ந்து இருக்கின்றனர்.  அப்போது அவரது நண்பர்கள் இருவர் தனது கைகளில் கரன்சி நோட்டுகளை சீட்டுக்கட்டு போல் அடுக்கி வைத்துக்கொண்டு அதனை ஒவ்வொன்றாக மணமக்களின் மீது வீசுகின்றனர்.  அவ்வாறு ஒருவர் பணத்தை வீசிக்கொண்டிருக்க, மற்றொருவர் பணத்தை வீசிவிட்டு மணமகன் அமர்ந்திருக்கும் சோபாவின் கைப்பிடிப்பியில் அமர முற்படும்போது தடுமாறி மணமகனின் மடியில் விழுந்து விடுகிறார்.  இதனை கண்ட மணமகள் சிரிக்க, கடுப்பான மணமகன் அவரது நண்பரை அங்கிருந்து செல்லுமாறு கூறுகிறார். 

 

இந்த வீடியோ 152,995 லைக்குகளை பெற்று இணையவாசிகள் பலரையும் ஈர்த்து வருகிறது.  இந்த வீடியோவிற்கு பலரும் சிரிப்பு எமோஜிகளையும், நெருப்பு எமோஜிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ | Puppies Cute Video: கடும் குளிரில் நாய் குட்டிகள் குளிர் காய ‘தீ’ மூட்டிய கருணை மனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News