மணமேடையில் மணமகன் செய்த செயல், கடுப்பான மணப்பெண்: வீடியோ வைரல்

Viral Video: திருமண நாளிலேயே மணமகனை வெளுத்து வாங்கிய மணப்பெண்ணின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்தால் நீங்களும் ஆச்சரியடைந்துவீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 15, 2023, 03:30 PM IST
  • மணமகனை மணமகள் தாக்கிய வீடியோ.
  • வீடியோவை மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
  • இந்த வீடியோவில் மணமேடையில் நடக்கிறது.
மணமேடையில் மணமகன் செய்த செயல், கடுப்பான மணப்பெண்:  வீடியோ வைரல் title=

இன்றைய திருமணம் வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சில திருமண வீடியோக்கள் மிகவும் ஆபத்தானவை, அவற்றைப் பார்த்த பிறகு நம்மால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது. நாங்கள் உங்களோடு பகிரப்போகும் வீடியோவும் இது போன்ற ஓர் நிகழ்வை தொடர்புடையது தான். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் திகைத்து போயுள்ளனர். காணொளியில் மணமக்களின் செயலை பார்த்து அனைவரின் அதிர்ச்சியடடைந்தனர். வீடியோவைப் பார்த்தால், திருமண நாளில் இதுபோன்ற செயலை யாராவது செய்ய முடியுமா என்று நீங்கள் ஒரு கணம் யோசிப்பீர்கள்.

மேலும் படிக்க | தூக்கத்தெல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது: மாஸ் மணமகள்.. வைரல் வீடியோ

மணமகனை தாக்கிய மணமகள்
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில், மணமக்கள் மேடையில் காணப்படுவதைக் காணலாம். இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். மணமகள் தனது வருங்கால கணவருக்கு முதலில் இனிப்பை (ரசகுல்லா) அன்புடன் ஊட்டுகிறார். மணமகன் வெட்கத்துடன் இந்த இனிப்பை சாப்பிடுகிறார். மணமகள் சாப்பிடும் முறை வரும்போது, ​​மணமகன் மணமகளுக்கு ஊட்டிவிட கையை நீட்டுகிறார், ஆனால் மணமகள் சாப்பிட மறுக்கிறார். மணமகன் கோபமடைந்து மணமகளின் வாயில் இனிப்பை திணிக்கத் தொடங்குகிறார். மணமகள் இதற்கு பதிலளித்து மேடையிலேயே மணமகனை அடிக்கத் தொடங்குகிறார். மணமகனை மணப்பெண் பயங்கரமாக தாக்குவதை வீடியோவில் தெளிவாக நாம் காணலாம்.

மணமகனை மணமகள் தாக்கிய வீடியோவை இங்கே காணுங்கள்:

வீடியோவை மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்
இந்த வீடியோ ட்விட்டர் பயனரால் பகிரப்பட்டுள்ளது. மேலும் மக்களின் கருத்துக்களும் காணொளியில் வெளியாகி வருகின்றன. ஒரு பயனர் "இது ஒரு நாடகம் போல் தெரிகிறது" என்று எழுதினார். ஒரு பயனர் "இந்த சம்பவம் உண்மையில் திருமணத்தில் நடந்ததா? திருமணமான முதல் நாளே இப்படியா, இனி அடுத்து என்ன நடக்கும்" என்று எழுதினார், மற்றொரு பயனர் "மணமகள் சாப்பிட்டிருந்தால் என்ன குரஞ்ஜா போய்டுவாங்க" என்று ஒருவர் எழுயுள்ளார். 

வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோவை சமூக வலைதளவாசிகளும் வைரலாக பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | வாடா நீயா நானா பாத்திரலாம்.. பாம்புடன் மல்லுக்கட்டும் முயல்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News