அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஸ்டேட்டன் தீவில் முதல் மிஸ் இலங்கை அழகிப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அழகிப்போட்டிக்கு பின்னர் நடந்த விருந்தில், நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலர் கைக்கலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அடிதடி சம்பவத்தை அங்கிருந்த சிலர் மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். அதில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 300க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படும் நிலையில், ஆண்கள், பெண்கள் உள்பட பலரும் அடிதடியில் ஈடுபடுவது வீடியோவில் காணமுடிகிறது.
மோதலுக்கான காரணங்கள் இன்னும் தெரிய வராத நிலையில், சண்டையினால் அங்கிருந்த பல பொருள்கள் சேதமடைந்துள்ளன. மேலும், கைக்கலப்பில் ஈடுப்பட்டவர்களில் சிலர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோர் அதிகமாக உள்ள ஸ்டேட்டன் தீவில், இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி, பொருளாதார நெருக்கடியில் இருக்கும் அவர்களின் தாயகமான இலங்கையின் நிவாரணத்திற்கு அளிக்க திட்டமிடப்பட்டது.
போட்டி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுஜானி பெர்னாண்டோ கூறியதாவது, அழகிப்போட்டியில் பங்கேற்ற 14 போட்டியாளர்களில் எவரும் சண்டையில் ஈடுபடவில்லை என்றார்.
Miss Sri Lanka New York after party - video 2 pic.twitter.com/sp94xPe4lK
— Under The Coconut Tree (@Toddy_Lad) October 23, 2022
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், இதேபோன்ற அழகிப்போட்டியில் வென்றவரின் தலையில் இருந்த கிரீடத்தை முன்னாள் மிஸ் இலங்கை பெண்மணி பறித்த சம்பவமும் நடந்தது. அதாவது, அந்த அந்த போட்டியில் வென்ற பெண் விவாகரத்து வாங்கிவிட்டதால், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் மிஸ் இலங்கை பட்டத்தை வென்றவர் அந்த காரியத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள், இலங்கை நெட்டிசன்களை கோபமடைய செய்துள்ளது. இதுபோன்ற செயல்கள், அமெரிக்காவில் இலங்கை மக்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ட்விட்டரில் ஒருவர்,"இது கிராமப்புற இலங்கையர்களின் வழக்கமான நடத்தை தான். ஒவ்வொரு நிகழ்ச்சியும் சண்டையில் முடிவடைகிறது. இதில், பெரியவர்கள், குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரும் உள்ளனர். பிளாஸ்டிக் நாற்காலிகள், குடைகள் மூலம் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறார்கள். பார்க்க மிகவும் வேதனையாக இருக்கிறது".
மேலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு போட்டி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுஜானி பெர்னாண்டோ கூறுகையில்,"இலங்கை மக்கள் நல் உள்ளம் கொண்டவர்கள். இது ஒரு சின்ன சண்டை - சண்டைகள் நடக்கும், குழந்தைகள் சண்டையிடுகிறார்கள். இது அனைத்து தேசத்திலும் நடக்கக்கூடியதுதான். அது இலங்கை மக்கள் மட்டும்தான் இப்படி இருக்கிறார்கள் என்று கூற முடியாது. நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல," என்று பதிலளித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற மிஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை ஏஞ்சலியா குணசேகரா என்பவர் வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பூனையை தாயாக நினைத்து கொஞ்சி விளையாடும் நாய்க்குட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ