ஒரே செகண்டுதான்...கோழிய காணல: தாத்தாவின் தில்லாலங்கடி திருட்டு, வைரல் வீடியோ

Old Man Viral Video: முதியவர் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது. இதில் அவர் அசால்டாய் கோழியை திருடுவதை காண முடிகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 9, 2022, 03:49 PM IST
  • ஒரு முதியவர் மற்றொரு நபரின் வீட்டுக்கு சென்றிருப்பதை வீடியோவில் காண முடிகின்றது.
  • சில கோழிகள் அவரைச் சுற்றி தானியங்களைத் தின்று கொண்டிருந்தன.
  • முதியவர் வெகுநேரம் அவற்றைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்.
ஒரே செகண்டுதான்...கோழிய காணல: தாத்தாவின் தில்லாலங்கடி திருட்டு, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

முதியவர்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகின்றன. திருமணங்களில் சில சமயம் ஸ்டண்ட் காட்டுவதும், சில சமயம் தனித்துவமான ஸ்டைலில் நடனமாடுவதும் முதியவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. தற்போது மீண்டும் ஒரு முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இதில் ஒரு தாத்தா மின்னல் வேகத்தில் கோழியை திருடுவது போல் தெரிகிறது. இவரின் இந்த நடவடிக்கையை பார்த்து சமூக வலைதளவாசிகளும் அதிர்ந்து போயுள்ளனர். இந்த வீடியோ தற்போது பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Shocking Video: ரயில் நிலையத்தில் TTE மீது விழுந்த உயர் மின்னழுத்த கம்பி! 

கோழியை திருடிய தாத்தா

ஒரு முதியவர் மற்றொரு நபரின் வீட்டுக்கு சென்றிருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. சில கோழிகள் அவரைச் சுற்றி தானியங்களைத் தின்று கொண்டிருந்தன. முதியவர் வெகுநேரம் அவற்றைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். வாய்ப்பு கிடைத்தவுடனேயே மின்னல் வேகத்தில் கோழியை திருடி ஒரு பானையை அதன் மேல் கவுத்துவிடுகிறார். இவரது திருட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தாத்தாவின் தில்லாலங்கடி திருட்டு வீடியோவை இங்கே காணலாம்: 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by satyam_x04_ (@satyam_x04_)

 

மிகவும் வேகமாக தாத்தா கோழியை திருடிய விதம் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கின்றது. இப்படி ஒரு முதியவர் கோழியை திருடுவதை அவ்வளவாக எங்கும் நாம் காண முடியாது. திருட்டு தொடர்பான வீடியோ satyam_x04 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | 'எனக்கு கொஞ்சம் X Ray எடுங்க': சூப்பர் யானை, வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News