வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
திருமணங்களில் நடக்கும் பல வேடிக்கையான சம்பவங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. சில சமயங்களில் மணமக்களின் காதல் நிறைந்த பாச பரிமாற்றம் காணக்கிடைக்கிறது, சில சமயங்களில் அவர்களின் கோவமும் காட்சிப்பொருளாகின்றது. சில சமயங்களிலோ அவர்கள் செய்யும் கிண்டல்களும், நக்கல் நையாண்டிகளும் வைரலாகின்றன.
தற்போது மீண்டும் மணமக்கள் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் மணமகன் செய்யும் ஒரு செயல் நம்மால் நம்ப முடியாதபடி உள்ளது. இதில் மணப்பெண்ணுக்கு இனிப்பு ஊட்டுவதற்கு பதிலாக பின்னால் நின்றுகொண்டிருந்த தனது தோழனுக்கு அவர் இனிப்பை ஊட்டிவிடுகிறார். இது மணமகள் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
மணமகன் செய்த விசித்திரமான வேலை
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மேடையில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடப்பதை காண முடிகின்றது. முதலில் மணமகனின் வரவேற்பு நடக்கிறது. இதற்கிடையில், மணமகள் அவருக்கு இனிப்பை ஊட்டிவிடுகிறார். அவர் அதை மகிழ்ச்சியுடன் சாப்பிடுகிறார். இப்போது மணமகளுக்கு இனிப்பு ஊட்டவேண்டிய முறை. ஆனால் அவர் இங்கே தன் குறும்பை காட்டுகிறார். அவர் தன் கையால் இனிப்பை எடுக்கிறார். தனக்கு ஊட்டிவிடுவார் என மணமகள் எண்ணிக்கொண்டிருக்க, அதை அவர் தானே சாப்பிட்டு விடுகிறார். இதனால் மணமகள் ஏமாற்றமடைகிறார்.
மீண்டும் அவர் மற்றொரு இனிப்பை எடுக்கிறார். இதை அவர் தனக்கு கொடுப்பார் என காத்திருந்த மணமகளுக்கு மீண்டும் ஏமாற்றமே காத்திருக்கிறது. இப்போது இனிப்பை தனது பின்னால் நின்றுகொண்டிருந்த தனது நண்பனுக்கு ஊட்டிவிடுகிறார். நண்பனும் எதுவும் சொல்லாமல் அதை சாப்பிடுகிறார். இதனால் மணமகள் கடுப்பாகிறார். மணமகள் மட்டுமல்லாமல் திருமணத்திற்கு வந்திருந்த அனைத்து விருந்தினர்களும் மணமகனின் செயலைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
மணமகனின் நக்கல் வீடியோ வைரலானது
நாம் இணையத்தில் பல வித திருமண வீடியோக்களை பார்த்திருப்போம். ஆனால், இந்த வீடியோ மிக வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் உள்ளது. மணமகன் மணமகளை கடுப்பேற்றவே இவ்வாறு செய்கிறார் என்பது தெரிந்தாலும், திருமணத்தன்றே மணமகளை அவர் இப்படி நக்கல் செய்தது ஆச்சரியமாகத்தான் உள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் laxman_official_9ff என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு பல வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ