வைரல் வீடியோ: நாகமணி!! இந்தப் பெயரை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். நாகப்பாம்பின் தலையில் ரத்தினம் இருப்பதாகவும், அதற்கு 'நாகமணி' என்று பெயர் என்றும் நமது பெரியோர்கள் கூறியுள்ளனர். நாகமணி தொடர்பான பல கதைகளை புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் உண்மை என்ன என்பது இன்னும் பெரிய மர்மமாகவே உள்ளது. சிலர் நாகமணி இருப்பதாக நம்புகிறார்கள், பலரோ நாகமணி என்று ஒன்று இல்லை என்றே கூறுகிறார்கள்.
ஆனால், இந்த சந்தேகத்துக்கு பதிலளிக்கும் வகையில், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபர் நாகப்பாம்பின் தலையில் இருந்து நாகமணியை வெளியே எடுப்பதை காண முடிகின்றது. இது உண்மையில் நாகமணிதானா என்பது தெரியவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வயல்களுக்கு இடையே உள்ள மண் சாலையில் நாகப்பாம்பு ஒன்று இருப்பதை வீடியோவின் துவக்கத்தில் காண்கிறோம். அதன் அருகில் ஒரு துணியுடன் நிற்கும் ஒரு நபர் அதை கட்டுப்படுத்த முயல்கிறார். அந்த நபர் முன்னோக்கி நடந்தால், பாம்பு தனது உடலை வளைத்து பின்னோக்கி செல்கிறது. பாம்பு சாலையைக்கடந்து வயல்களுக்குள் செல்ல முயலும் போது அவர் அந்த பாம்பை பிடிக்க முயல்கிறார். பல முறை அவர் அதை பிடித்த போதிலும், பாம்பும் ஒவ்வொரு முறையும் அவர் பிடியிலிருந்து நழுவி விடுகிறது. இதற்கிடையில் பாம்பு அவரை கடிக்கவும் முயற்சிக்கிறது. ஆனால், அந்த நபர் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொள்கிறார்.
மேலும் படிக்க | வயசானாலும் சீற்றம் மட்டும் குறையாமல் கர்ஜிக்கும் கிழட்டு சிங்கம்: வைரலாகும் வீடியோ
இறுதியாக, அவர் ஒரு வழியாக, பாம்பை பிடித்து விடுகிறார். பாம்பை பிடித்த அந்த நபர் அதன் தலையை கத்தியலால் வெட்டுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. தலையின் ஒரு பகுதியை கத்தியால் கிழிக்கும் நபர் அங்கிருந்து சிறிய ரத்தினம் போன்ற ஒன்றை வெளியே எடுக்கிறார். பின்னர் அவர் அந்த பாம்பை கையில் பற்றிக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. நாகமணியை எடுத்த பின்னர் அந்த பாம்பை அந்த நபர் வயல்களில் விட்டுவிட்டார் என இந்த வீடியோ பற்றி கூறப்பட்டாலும், அந்த காட்சிகளை வீடியோவில் காண முடியவில்லை.
நாகப்பாம்பின் தலையிலிருந்து நாகமணி எடுக்கப்படும் அரிய வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ பழைய வீடியோ என்று கூறப்படுகின்றது. எனினும், இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடியோவில் காணப்படும் கல் உண்மையிலேயே நாகமணிதானா என்ற கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த வீடியோ 11,165,908 வியூஸ்களைப் பெற்றுள்ளது.
பலர் இந்த வீடியோவை ஆர்வத்துடன் பார்த்தாலும், ஒரு விலை உயர்ந்த கல்லுக்காக ஒரு உயிரினத்தை இப்படி வதைப்பது எந்த விதத்தில் நியாயம் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். வாயில்லா ஜீவன்களை மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் பயன்படுத்தும் பழக்கம் எப்போது முடிவடையும் என்ற கவலையையும் பலர் வெளிப்படுத்தியுள்ளனர். பல வித விமர்சனங்கள் இந்த வீடியோவுக்கு வந்த வண்ணம் உள்ளன.
நாகமணி: கற்பனையா / உண்மையா?
வராஹ மிஹிரு எழுதிய பிருஹத்சம்ஹிதையின்படி, நாகமணி ஒரு கற்பனைக் கதை அல்ல. இது பாம்பின் தலையில் இருக்கும் விலைமதிப்புமிக்க புனிதமான கல்லாக கருதப்படுகிறது. நாகப்பாம்புகள் மிகவும் அரிதானவை. நாகமணியுடன் கூடிய பாம்பு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று வராஹ மிஹிரு கூறுகிறார். அந்தப் பாம்பிலிருந்து வெளிப்படும் ஒளி நெருப்பு போன்ற ஒளியைக் கொடுக்கிறது. நாகமணியை தாங்கியிருக்கும் நாகப்பாம்புகள் இருக்கும் பகுதி முழுவதும் பிரகாசமாக காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. வாயில்லா ஜீவன்களை வதைக்கும் பழக்கத்தை ஜீ மீடியா ஆதரிக்கவில்லை.)
மேலும் படிக்க | கியூட் பூனை செய்யும் பானை: பார்த்து பார்த்து உருகும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ