அதிக பின்தொடர்பாளர்கள் கெண்ட தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோரை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி 3-ஆம் இடம் பிடித்துள்ளதாக டிப்ளமோஸி தெரிவித்துள்ளது.
இந்த கணக்கெடுக்கின் படி பிரதமர் மோடி அவர்களுக்கு சமூக வலைதளத்தில் 42 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். அதே வேலையில் அவரது தனிப்பட்ட கணக்கிற்கு 26 மில்லியன் பின்தொடர்பாளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கடந்த 12 மாதங்களில், பிரதமர் மோடி 52 மில்லியன் பதிவுகளை பகிர்ந்துள்ளார். அதே வேலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 264 மில்லியன் பதிவுகளை பகிர்ந்துள்ளார். இதற்கு இடைப்பட்ட விகிதாச்சாரமானது 1:5 என விகிதத்தில் உள்ளது என கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. இருப்பினும் குறைந்த அளவிலான பதிவுகளில் அதிக பின்தொடர்பாளர்களை பிரதமர் மோடி பெற்றுள்ளதாக இந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது.
பிரபல தகவல் தொடர்பு நிறுவனமான Burson Cohn & Wolfe (BCW) இன் சமீபத்திய 'தலையங்கம்' ஆய்வில் 951 ட்விட்டர் கணக்குகள், 372 தனிப்பட்ட மற்றும் 579 நிறுவன கணக்குகள், மாநில மற்றும் அரசுத் தலைவர்கள் மற்றும் 187 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் என பல பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகளை கொண்டு இந்த ஆய்வினை மோற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் "பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்களின் ட்விட்டர் கணக்கு 42 மில்லியன் பின்தொடர்பாளர்களையும், தனிப்பட்ட கணக்கில் 26 மில்லியன் பின்தொடர்பாளர்களையும் பெற்று மூன்றாவது மிகப்பெரிய தலைவராக இடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேலையில் வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்ஸ்வராஜ், ஜோர்டானின் குயீன் ரானியா மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோவி ஆகியோர் 10 மில்லியனுக்கும் மேலான பின்பற்றுபவர்களை பெற்று இப்பட்டியலின் முதல் 10 இடங்களை பெற்றுள்ளனர்.
வெளியுறவு துரை அமைச்சர்களை பொருத்துவரை சுஷ்மாஸ்வராஜ் 11 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
அமெரிக்க அரசின் கணக்குகள் @POOTUS மற்றும் @WhiteHouse கணக்குகளை முறையே 23 மற்றும் 17 மில்லியன் பின்பற்றுபவர்கள் பெற்று இப்பட்டியலில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தினை பெற்றுள்ளது. இந்த கணக்குகளை தொடர்ந்து துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் (@RT_Erdogan) 12 மில்லியனுக்கும் மேலான பின்பற்றுபவர்கள் பெற்று இடம்பெற்றுள்ளார்.
அறுபத்து ஒன்பது உலகத் தலைவர்கள் 1 மில்லியன் பேருக்கு மேல் உள்ளனர் எனவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் லாவோஸ், மவுரித்தானியா, நிகரகுவா, வட கொரியா, சுவாசிலாந்து மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய ஆறு நாடுகளின் அரசாங்கங்கள் மட்டுமே சமூக ஊடக அரங்கில் அதிகாரப்பூர்வ இடத்தில் இல்லை என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது!