வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன. திருமணத்தில் பல தினுசில் காட்சிகள் காணப்படுகின்றன.
பொதுவாக மேள தாளம் கொட்ட, பல வித நடன அசைவுகளுடன் மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்துக்குள் நுழைவதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் காணப்போகும் மணமகன் வித்தியாசமாக ஏதாவது செய்ய முடிவு செய்தார். வித்தியாசமான எண்ட்ரியை காட்டும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ‘imjustbesti’ என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை 253k வியூஸ்களும் 11k லைக்குகளும் கிடைத்துள்ளன. இது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது முதலில் டிக்டாகில் ‘dbhat’ என்ற பயனரால் வெளியிடப்பட்டது.
வீடியோவில், மஞ்சள் வண்ண குர்தா-பைஜாமா உடையணிந்த மணமகன், அதிரடியான நண்பர் கூட்டத்துடன் மாப்பிள்ளை அழைப்பில் பங்குகொள்வதை காண முடிகின்றது. அரங்கின் கதவு திறந்த உடனேயே, ஸ்டார் வார்ஸின் தீம் பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது. மேலும் மணமகன் தனது லைட் சேபரை சுற்றி அசைக்கிறார். அவர் பின்னால் சில குழந்தைகளும் இளைஞர்களும் வெள்ளை ஹெல்மெட்களுடன் ஸ்டாராம்ட்ரூபர்சாக உடையணிந்திருப்பதைக் காண முடிகின்றது.
அவர்களுக்குப் பின்னால் தோளில் WWE பெல்ட் அணிந்த ஒரு மனிதரும் வருகிறார். மாப்பிள்ளை தனது பரிவாங்கள் சூழ மண்டபத்துக்குள் வந்த வண்ணம் அனைவரையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. அனைத்து விருந்தினர்களின் முகங்களும் ஒளிரத் தொடங்குகின்றன. சிறிது நேரம் ஒளி வாளை வீசிய பிறகு, மணமகன் பாங்க்ரா நடனமாடுகிறார். ஒரு பெரிய யோடா பலூனைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணும் பின்னணியில் நடனமாடுவதைக் காண முடிகிறது. அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிகிறது. மொத்தத்தில் இது ஒரு அட்டகாசமான எண்ட்ரியாக அமைகிறது.
மேலும் படிக்க | ‘மேடையிலேயே ஆரம்பிச்சிட்டாங்களா!!’: மணமக்கள் செய்த வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள்
மாப்பிள்ளையின் மாஸ் எண்ட்ரி வீடியோவை இங்கே காணலாம்:
நெட்டிசன்கள் இந்த தனித்துவமான மணமகன் எண்ட்ரியை மிகவும் விரும்பி பார்த்து வருகிறார்கள். மேலும் அவர்களின் திருமண நாளிலும் இதுபோல செய்யலாமா என்றும் யோசிக்கிறார்கள். பல லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ள இந்த வீடியோ பல வித கமெண்டுகளையும் பெற்று வருகிறது.
ஒரு பயனர் தனது உறவினர்களை டேக் செய்து, "என் திருமணத்தில் இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்...ஏமாற்றி விடாதீற்கள்" என எழுதியுள்ளார். மற்றொரு பயனர், ""நான் பார்த்ததிலேயே அதிக கலாட்டாவான எண்ட்ரி" என கமெண்ட் செய்துள்ளார்.
மேலும் படிக்க | பந்தா காட்டிய மணமகள், மேடையில் மாப்பிள்ளை செய்த வேலை: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ