Viral News: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீபத்திய நாட்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகின்றது.
புதிதாக வாங்கப்பட்டஒரு சோபா, ஓய்வெடுக்க ஏற்ற இடமாக இருப்பதற்குப் பதிலாக, மிகவும் ஆபத்தான இடமாக மாறியது! அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கிளியர்வாட்டரில் ஒருவர் வாங்கிய புதிய சோபாவில் 5 அடி நீளமுள்ள பாம்பு மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புத்தம் புதிய சோபவில் பாம்பைக் கண்ட அந்த நபரின் நிலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!!
கிளியர்வாட்டர் காவல் துறையினர் இந்த செய்தியை சமூக ஊடகங்களில் (Social Media) பகிர்ந்துகொண்டனர். சோபாவுக்கு உள்ளே, சிவப்பு வால் கொண்ட போவா என்று அழைக்கப்படும் போவா கன்ஸ்டிரிக்டரை பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பாம்பை அதிகாரிகள் எப்படி அகற்றினார்கள்?
ஊடக அறிக்கையின்படி, அதிகாரிகள் படுக்கையை வெளியே எடுத்துச் சென்று, பாம்பு (Snake) இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்த பிறகு, அதை பாதுகாப்பாக அகற்றினர்.
பதிவின் படி, "அவர்கள் (காவல்துறையினர்) பாம்பு பதுங்கி இருந்த அதன் மறைவிடத்திலிருந்து அதை கவனமாகப் பிடித்தனர். அது சுமார் 5 அடி நீளம் கொண்டிருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட பிறகு, அந்த பாம்பு உள்ளூர் செல்லப் பிராணிகள் கடைக்கு கொண்டு செல்லப்பட்டது."
போலீசார் தங்கள் பதிவில், "அந்த நபர் அப்போதுதான் அந்த சோபாவை புதிதாக வாங்கி இருந்தார். சோபா தன் வீட்டிற்கு வந்ததிலிருந்தே அந்த பாம்பு அதற்குள் மறைந்திருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். அதிகாரிகள் சோபாவை மீண்டும் அவரது வீட்டுக்கு கொண்டு சென்றனர்.” என எழுதப்பட்டிருந்தது.
ALSO READ | Viral Video: ‘நாங்களும் ஜிம்முக்கு போவோம்ல’... அசத்தும் பூனைக் குட்டி..!!
இந்த வினோத சம்பவத்தைப் பற்றிய பதிவை இங்கே காணலாம்:
இந்த பதிவுக்கு சமூக ஊடகங்களில் பலவித பின்னூட்டங்கள் கிடைத்து வருகின்றன. பல பயனர்கள், அதிகாரிகளின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.
ALSO READ | மாலையை தூக்கி எறிந்த மணமகள், திகைத்து நின்ற மணமகன்: அங்க ஒரு ட்விஸ்ட்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G