சீர்காழி காவல் நிலையத்திற்கு குடிபோதையில் வந்து காவலர்களைத் தரக்குறைவாகப் பேசி ரகளையில் ஈடுபடும் வழக்கறிஞரின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை (Mayiladuthurai) மாவட்டம் சீர்காழியைச் (Sirkali) சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ், இவர் பார் கவுன்சில் செயலாளராகவும் உள்ளார். இவர் காவல்நிலையத்தில் புகுந்து குடி போதையில் காவல் நிலைய ஆய்வாளரை தகாத வார்த்தைகளை கூறி திட்டியும் காவல் நிலையத்திலேயே ரகளையில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
ALSO READ | 14 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்
காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது வழக்கறிஞர் ராஜேஷ் குடிபோதையில் காரை ஓட்டி சென்று தனியார் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சீர்காழி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் மீது புகார் அளித்துள்ளனர்.
இந்த வழக்கின் மீது விசாரணைக்கு வந்த ராஜேஷ் காவல்நிலையத்தில் உள்ளே சென்று குடிபோதையில் ஆய்வாளர் மற்றும் எஸ்.பி ஆகியோரை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டியும் அங்குள்ள காவலர்களை நீ யார் உன்னை என்ன செய்கிறேன் என பார்த்து மிரட்டியும் மற்ற ஜாதியினரை தரக்குறைவாகப் பேசும் பேசும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக இணையதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தனியார் பேருந்து ஓட்டுனர் அன்புமணன் அளித்த புகாரின் பேரில் குடிபோதையில் தகராறு செய்த வழக்கறிஞர் பார் கவுன்சில் செயலாளர் ராஜேஷ் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் ராஜா, சிவா,உள்ளிட்ட 3 பேர் மீது சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய வழக்கறிஞரே, இப்படி மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொள்ளலாமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பிய உள்ளனர்.
ALSO READ | நாமக்கல்லில் நடுங்க வைக்கும் சம்பவம்: சிறுமி பாலியல் வன்கொடுமை, 12 பேர் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR