கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் விராட் கோலி மற்றும் தென் ஆப்பிரிக்கா அதிரடி வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் புகைப்படத்திற்கு பெங்களூருவைச் சேர்ந்த ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்துள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஏ.பி.டிவில்லியர்ஸ் தனியார் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் ஆடவுள்ளதாகத் அறிவித்த போது IPL கிரிக்கெட் தன் மனதுக்கு அந்தரங்கமானது என்றும், இந்தத் தொடரை தன்னால் ஒரு போதும் புறக்கணிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது பிறந்த்நாளை(பிப்ரவரி 17) முன்னிட்டு அவரது ரசிகர்கள் அவருக்கு பாலாபிஷேகம் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். IPL தொடரின் போது பெங்களூரு அணிக்காக விளையாடும் டிவில்லியர்ஸ், தனது இந்திய ரசிகர்களின் இந்த செயல்பாட்டை நிச்சையம் வியந்திருப்பார்.
Celebration Started In Bang @RCBTweets @ABdeVilliers17 @imVkohli @ViratGang @BoldBrigade #HappyBirthdayABD pic.twitter.com/i1RWQqSKNc
— Thalapathy Virat Praveen (@mafiapraveen) February 17, 2019
முன்னதாக விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் ஏ.பி.டிவில்லியர்ஸ், மற்றும் இந்திய வீரர் விராட் கோலி ஆகியோர் சேர்ந்திருக்கும் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர்.
பாலாபிஷேகம் செய்த இச்சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
IPL போட்டித்தொடரை ஒருமுறை கூட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதில்லை. வரும் IPL தொடரில் பெங்களூரு ரசிகர்களின் இந்த தீரா தாகத்தையும் விராட் கோலி படை தணிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.