Watch Viral Video: ‘குடிமகளுக்கு’ நேர்ந்த வேதனை; ஏறிய போதை நொடியில் இறங்கிய சோதனை

வீடியோவில், ஒரு பெண் தனது சில நண்பர்களுடன் பார்ட்டியில் இருக்கிறார். வீடியோவின் ஆரம்பத்தில், எல்லாம் நன்றாக தான் போய் கொண்டு இருக்கிறது, ஆனால்  காட்சி மாறுகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 11, 2021, 01:01 PM IST
  • வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
  • சிறுமியும் அவரது நண்பர்களும் அதிக அளவில் மது அருந்தினர்
  • தோளில் சுமந்து நடந்து செல்லும்போது விபத்து ஏற்பட்டது
Watch Viral Video: ‘குடிமகளுக்கு’ நேர்ந்த வேதனை; ஏறிய போதை நொடியில் இறங்கிய சோதனை title=

புதுடெல்லி: நண்பர்கள் ஒன்றக சேர்ந்த மது அருந்துவதில் தவறேதும் இல்லை. ஆனால், அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், போதை தலைகேறி என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்வது, பல,சமயங்களில் ஆபத்தாகி விடுகிறது.

அது தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு பெண் தனது சில நண்பர்களுடன் பார்ட்டியில் இருக்கிறார். வீடியோவின் ஆரம்பத்தில், எல்லாம் நன்றாக தான் போய் கொண்டு இருக்கிறது, ஆனால்  காட்சி மாறுகின்றன. 

இந்த வீடியோவை டிக்டோக் பயனர் @ autumncathey6  என்பவர் எடுத்துள்ளார். வீடியோவை எடுத்துள்ள இந்த பயனரும் அவரது சில நண்பர்களும் மது பானங்கள் குடித்த பின் தங்களது நடவடிக்கையில் என்ன மாற்றங்கள் என்பதை விளக்க முயன்றனர். வீடியோவில், மது பானங்களை எடுத்துக் கொண்ட பிறகு, அவர்கள் தாங்கள் எந்த அளவிற்கு குடித்துள்ளோம்,  எங்களின் நிலை என்ன என்பதைக் கூறுவதைக் காணலாம். இந்த வீடியோவை ட்விட்டரில் @fernvndoo என்ற பயனர் 'OH MY GOD' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்.

எல்லோரும் குடித்துவிட்டு பாரில்  இருந்து வெளியேறும்போது, ​​டிக் டாக் பயனர் தனது தோழர்களில் ஒருவரின் தோளில் சவாரி செய்கிறார், இருவரும் குடிபோதையில் இருக்கிறார்கள். எல்லாம் சரியாக போய் கொண்டிருந்த நேரத்தில், நடந்த விபரீதமான செயல் ஒன்றினால், ஏறிய போதை நொடியில் இறங்கியது. வீடியோவின் கடைசி பகுதி, நண்பரின் தோளில் சவாரி செய்யும் பெண் காரில் அமர்ந்திருப்பதையும், அவளது முன் பற்கள் பலவற்றை காணலாம். சிறுமியின் வாயிலிருந்து ரத்தம் வருவதையும் காணலாம்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ட்விட்டரில் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

ALSO READ | பிரதமர் என்றால் விதிவிலக்கா என்ன; அதிரடி காட்டிய நார்வே போலீஸ்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News