Viral Video: தரையிறங்கிய போது துள்ளி குதித்த ஹெலிகாப்டர்; பீதியில் ஓடிய மக்கள்

உத்திராகண்டில் உள்ள கேதார்நாத் தாமில் ஹெலிகாப்டர் ஒன்று ஆபத்தான முறையில் தரையிறங்கியது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 7, 2022, 09:12 AM IST
  • உத்தரகாண்டில் தொடரும் சார் தாம் யாத்திரை.
  • ஹெலிகாப்டர் ஆபத்தான முறையில் தரையிறங்கியசம்பவம்.
  • சிவில் ஏவியேஷன் ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
Viral Video: தரையிறங்கிய போது துள்ளி குதித்த ஹெலிகாப்டர்; பீதியில் ஓடிய மக்கள்  title=

உத்தரகாண்டில் சார் தாம் யாத்திரை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மே 6 ஆம் தேதி தொடங்கிய யாத்திரையில், இது வரை குறைந்தது 4.5 லட்சம் யாத்ரீகர்கள் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.

கேதார்நாத் தாமில் பயணிகளின் வசதிக்காக, ஹெலிகாப்டர் சேவை நீண்ட நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. நடந்து வரமுடியாதவர்களுக்கும் அல்லது வயதான பயணிகளுக்கு இந்த சேவை பெரும் உதவியாக உள்ளது. ஆனால், மே 31ம் தேதி விபத்து ஏற்பட்ட பிறகு, ஹெலிகாப்டரில் அமரவே மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது தான் அதற்கு முக்கிய காரணம். 

ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது கட்டுப்பாடட்டை இழந்தது தான் இந்த சம்பவத்திற்கான காரணம். இந்த பயங்கரமான காட்சியைப் பார்த்தவர்கள் அலறி கொண்டு அங்கும் இங்கும் ஓடுவதை வீடியோவில் காணலாம்.

அங்கிருந்த மக்களுக்கு பதற்றம் ஏற்பாட்டதன் காரணமாக அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நிகழ்வுக்கு பிறகு, ஹெலிகாப்டரை ஆபத்தான முறையில் தரையிறக்கியது தொடர்பாக ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களுக்கு சிவில் ஏவியேஷன் ஆலோசனையும் வழங்கியுள்ளது.

எனினும், கேதார்நாத் தாமில், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க |  Indian Railways: IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம்

பகீர் வீடியோவை இங்கே பாருங்கள்:

 

 

ஹெலிகாப்டரை இயக்குவது குறித்து அனைத்து ஆபரேட்டர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. SOP நெறிமுறைகளின் படி பாதுகாப்பு தர விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் நடவடிக்கைகளில் பாதுகாப்பு மேற்பார்வையை உறுதி செய்வதற்காக ஸ்பாட் சோதனையும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்துகளுக்கு  பொறுப்பான, ஆபரேட்டர் மற்றும் செயல்பாட்டு பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம், மே 31ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில், கேதார்நாத் ஹெலிபேடில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஏற்பட்டது. ஹெலிகாப்டர் தவறான கோணத்தில் ஹெலிபேடில் தரையிறங்கியது. டச் டவுன் ஆகும் போது, ​​ஹெலிகாப்டர் ஹெலிபேடின் மேற்பரப்பை கடுமையாக தாக்கியது, பின்னர் குதித்து சுமார் 270 டிகிரி சுழற்றியது. ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்ததாக பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு அதிகாரி தெரிவித்தார். இதனால், அருகில் இருந்த பக்தர்கள் அனைவரும் அச்சமடைந்து ஹெலிபேடிலிருந்து ஓடத் தொடங்கினர். இதனால் ஹெலிபேடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரகாண்டில் தொடரும் சார் தாம் யாத்திரை 

உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை நடைபெற்று வரும் வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மே 6 ஆம் தேதி தொடங்கிய யாத்திரையில் இருந்து குறைந்தது 4.5 லட்சம் யாத்ரீகர்கள்பயணம் மேற்கொண்டுள்ளனர். யாத்திரீகர்களின் அதிகபட்ச கூட்டம் 2019 ஆம் ஆண்டு காணப்பட்டது. அப்போது கோவிலில் 10 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்க | பறவை பார்வை பார்க்க ஆசையா இதை பாருங்கள் - வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News