யோகி பாபு மாஸ் கிரிக்கெட் வீடியோ: பட்டையைக் கிளப்பும் யோகி பாபு, புகழ்ந்து தள்ளும் fans

யோகி பாபு தனது சிறு வயதிலிருந்தே ஒரு விளையாட்டு வீரராக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் மீதான தனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அவர் அவ்வப்போது, பல சமயங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 9, 2021, 07:40 PM IST
  • தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் படைத்தவர் நடிகர் யோகி பாபு.
  • அவர் கிரிக்கெட் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்கள்.
  • வீடியோ வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
யோகி பாபு மாஸ் கிரிக்கெட் வீடியோ: பட்டையைக் கிளப்பும் யோகி பாபு, புகழ்ந்து தள்ளும் fans title=

நடிகர் யோகி பாபு கோலிவுட்டின் மிகவும் பிஸியான நட்சத்திரங்களில் ஒருவர் ஆவார். தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும், தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடம் படைத்தவர்களில் நடிகர் யோகி பாபுவும் ஒருவர். அவர் 30 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

யோகி பாபு தனது சிறு வயதிலிருந்தே ஒரு விளையாட்டு வீரராக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் மீதான தனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அவர் அவ்வப்போது, பல சமயங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இப்போது யோகி பாபு, தான் பேட்டிங் செய்யும் ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதில் அவர் அனைத்து திசைகளிலும் பந்தை விளாசுவதைக் காண முடிகிறது.

யோகி பாபு பகிர்ந்துள்ள இந்த மாஸ் வீடியோ, நெட்டிசன்களின் அன்பைப் பெற்று வைரலாகிவிட்டது (Viral video). யோகி பாபு பந்தை அடிக்கு அழகை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். யோகி பாபுவுக்குள் பத்து யுவ்ராஜ் சிங்கும் பத்து சச்சின் டெண்டுல்கரும் வந்து விட்டார்களா என சிலர் சிலிர்ந்த்தும் போகிறார்கள்.

No description available.

திரைப்படங்களைப் பொறுத்தவரை, யோகி பாபு டிக்கிலோனா, கடைசி விவாசாயி, மண்டேலா, அயலான், பன்னிக்குட்டி, மற்றும் இன்னும் பல திரைப்படங்களில் (Kollywood) நடித்து வருகிறார். யோகி பாபுவின் இயல்பான நடிப்பும் அசால்டான நகைச்சுவையும் ரசிகர்களை அவர் பக்கம் ஈர்க்கும் விஷயங்களாகும்.

ALSO READ: சூப்பர் கிரிக்கெட்டரில் இருந்து Friendship நடிகராக அவதாரம் எடுக்கும் ஹர்பஜன் சிங்

ALSO READ: Income Tax Raid: மிகப்பெரிய சிக்கலில் தனுஷ் பட ஹீரோயின்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News