Astro: வாழ்க்கையை புரட்டி போடும் ராகு-கேது தோஷம்; சில எளிய பரிகாரங்கள்!

ராகு-கேது பெயர்ச்சியாலும் ராகு கேது தோஷத்தினாலும் ஏற்படும் பாதகமான பலன்களை தவிர்க்க  இந்த எளிய பரிகாரங்களே போதும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 29, 2022, 02:55 PM IST
  • ராகு கேது தோஷம் உள்ள ராசிகளுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும்.
  • மனநோய், மற்றும் உடல்நலம் தொடர்பான தீவிரமான பிரச்சனைகள் ஏற்படும்.
  • ராகு கிரகத்தின் நிலை சாதகமாக இருந்தால், புகழ், அங்கீகாரம் ஆகியவை கிடைக்கிறது.
Astro: வாழ்க்கையை புரட்டி போடும் ராகு-கேது  தோஷம்; சில எளிய பரிகாரங்கள்! title=

ராகு மற்றும் கேது ஆகியவை சந்திரனின் வடக்கு மற்றும் தெற்கு முனைகளை முறையே குறிக்கும் கிரகங்களாகும். இந்த கிரகங்கள் கற்பனையான இயல்பு காரணமாக இவற்றுக்கு தனிப்பட்ட அடையாளம் இல்லை. எனவே இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ராகு-கேது பெயர்ச்சி பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை  நடைபெறுகிறது. ராகு பெயர்ச்சியினால் பாதகமான பலன்களை சந்திக்கும் ராசிகள், அல்லது ராகு கேது தோஷம் உள்ள ராசிகளுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும். இதனால், சட்டச் சிக்கல்கள், குடும்ப உறுப்பினரின் உயிரிழப்பு அல்லது கடுமையான விபத்து , திருட்டு, மனநோய், மற்றும் உடல் நலம் தொடர்பான தீவிரமான பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளுக்கு ராகு காரணமாக அமைகிறது. அதே நேரத்தில், ஜாதகத்தில் ராகு கிரகத்தின் நிலை சாதகமாக இருந்தால், அந்த ஜாதகருக்கு புகழ், அங்கீகாரம் ஆகியவை கிடைக்கிறது.

அதே போன்று ஜாதகத்தில் கேதுவின் நிலை பாதகமாக இருந்தால், கணையம் தொடர்பான பிரச்சனைகள், காது தொடர்பான பிரச்சனைகள், நுரையீரல் மற்றும் மூளை தொடர்பான உபாதைகள் போன்ற தீவிர உடல் நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும், உறவுகளில் பிரச்சனைகளையும், துன்பங்களையும் சந்திக்க நேரிடும். எனினும், ராகு-கேது சஞ்சாரத்தின் மோசமான பாதிப்புகளையும் ராகு கேது தோஷங்களையும் சமாளிக்க உதவும் சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ளலாம்

சில எளிய ராகு கேது தோஷ பரிகாரங்கள்:

1. ராகு-கேது என்னும் நிழல் கிரகங்களின் மோசமான பாதிப்புகளைத் தவிர்க்க, ராகு காலத்தில் துர்கா பூஜை செய்வது நல்ல பலன் கொடுக்கும். 

2. ஜாதகத்தில் ராகுவின் நிலையினால் ஏற்படும் தடைகளை நீக்க, ‘ஓம் பிரம் ப்ரீம் ப்ரூம் ச ரஹவே நமஹ' மந்திரத்தை  தினமும் 108 முறை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரம் சிவபெருமானை திருப்திப்படுத்தவும், நரம்புகளை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.

3. கேதுவின்  நிலையினால் ஏற்படும் தடைகள் மற்றும் பிரச்சனைகளை சமாளிக்க, ‘ஓம் ஸ்த்ரிம் ஸ்த்ரிம் ஸ்த்ரீம் ஸஹ கேதவே நமஹ’ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இந்த மந்திரம் விக்னங்களை நீக்கும் விநாயகப் பெருமானுக்கானது.  இது கேதுவின் எதிர்மறை ஆற்றல்களை நிர்மூலமாக்க உதவுகிறது.

மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!

4.  ராகு-கேது தோஷத்தில் இருந்து விடுபட, ‘ஓம் நமஹ பகவத் வாசுதேவாய’ மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்கவும், பகவான் கிருஷ்ணரின் நடனமாடும் படத்தை முன் வைத்து ஜபிப்பது சிறந்த பலனைக் கொடுக்கும்

5. ஏழைகளுக்கு நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகள் அல்லது போர்வைகள் ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம். சமையல் எண்ணெய், கருப்பு எள் ஆகியவற்றை தானமாக வழங்க வேண்டும். அதிகபட்ச பலனைப் பெற சனி, புதன் கிழமைகளில் அன்னதானம் செய்ய வேண்டும்.

6 ராகு-கேதுவின் தோஷத்தைத் தவிர்க்க, ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவலாம். 

7. ஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளவர்கள் வெளிர் நீல நிற ஆடைகளை அணிய வேண்டும். மறுபுறம், கேது தோஷம் உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்து தானம் செய்ய வேண்டும்.

8. ராகு கேது தோஷம் நீங்க, பஞ்சமுகி சிவன் முன் ருத்ராட்சத்தின் ஜெபமாலையுடன் 'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தை தினமும் உச்சரிக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News