சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் இடம்பெயருவதால் தனுசு ராசியினர் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள். அதேநேரத்தில் மீன ராசிக்கு ஏழரை சனி தொங்குகிறது. இந்த சனிப்பெயர்ச்சியால், யாருக்கெல்லாம் லாபம், யாருக்கெல்லாம் சங்கடம், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
சனி பெயர்ச்சி 2023
சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும். நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக இடம்பெயரக்கூடிய சனி பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயருவதற்கு இரண்டை ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். அந்த வகையில் 2023 ஜனவரி 17ம் தேதி செவ்வாய் கிழமை, மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆக உள்ளார்.
மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்!
விடுதலை பெறப்போகும் ராசிகள்
சனிப்பெயர்ச்சி காரணமாக ஏழரை சனியில் இருந்து தனுசு ராசியினர் விடுதலை பெறுகின்றனர். அஷ்டம சனியில் அவதிப்பட்டு வந்த மிதுன ராசிக்கு இனி வரும் காலம் யோகமாக அமையப்போகிறது. அதேபோல் ரிஷபம் மற்றும் கன்னி ராசியினருக்கும் நல்ல காலம் காத்திருக்கிறது. கண்ட சனி தொடங்கும் சிம்ம ராசியும் கவனமாக இருப்பது அவசியம்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
ஏழரை சனி தொடங்கும் கும்ப ராசி, அஷ்டம சனி தொடங்கும் கடக ராசி, அர்த்தாஷ்டம சனி தொடங்கும் விருச்சிக ராசி ஆகியவை கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ