சனி பகவானுக்கு உரிய நாளான சனிக்கிழமை நாளன்று சனிபகவான் தொடர்பான சில தகவல்களை தெரிந்துக் கொள்வது உங்கள் வாழ்க்கையில் தெரியாமல் செய்து வரும் சில தவறுகளை தவிர்த்து, சனீஸ்வரருக்கு பிடித்த செயல்களை செய்து வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.
நீதியின் கடவுள் என்றும் கர்மவினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் நீதிதேவன் என்று அறியப்படும் சனி தேவரை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்குத் தெரிந்தாலும், என்ன செய்யக்கூடாது என்பது பலருக்குத் தெரிவதில்லை.
ஒருவர் செய்யும் செயல்களின் அடிப்படையில் தகுந்த பலனை வழங்கும் சனீஸ்வரரின் அருள் இருந்தால், விதிப்படி வரக்கூடிய துன்பங்கள் சற்றே குறையும் அல்லது அவற்றை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையாவது உருவாகும். சனிபகவானின் அருள் வேண்டுமெனில், என்ன செய்யலாம், எதை செய்யக்கூடாது?
சனி கிரகத்தின் பல்வேறு நிலைகளில் யாருக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து அனைத்துமே மாறுபடும். அதாவது ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, சனி திசை என பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறுவிதமான பலன்கள் இருக்கும் என்பதால், அதற்குத் தகுந்த பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.
பொதுவாக, சனீஸ்வரரின் பாதிப்புகளில் இருந்து விடுபடகாலபைரவரின் அம்சமாக கருதப் படக் கூடிய நாய்களின் பசியாற்றுவது நல்லது. அதேபோல், கடுமையாக உழைப்பவர்களுக்கு உணவு கொடுப்பது, ஆடைகள் வாங்கிக் கொடுப்பது என உதவிகளை செய்வது நல்லது. அதிலும் குறிப்பாக சனிக்கிழமை நாளில் தான தர்மங்கள் செய்வது சனீஸ்வரரை திருப்திப்படுத்தும்.
சனி பகவானுக்கு பெருமை பேசுபவர்களின் மீது அதிருப்தி ஏற்படும், எல்லாம் என்னால் மட்டுமே முடியும் என்ற அகம்பாவம் கொண்டவர்கள், சனியின் பிடியில் சிக்கினால் சீரழிய வேண்டியது தான். எனவே, சுய ஜாதகத்தில் சனி எந்த பாவத்தில் நிற்கிறாரோ அந்த பாவகம் சார்ந்த விஷயங்களில் தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும்.
அதேபோல, சனிக்கிழமையன்று 5 விஷயங்களைத் தவிர்த்தால், சனீஸ்வரரின் மோசமான தாக்கம் குறையும்.
சனீஸ்வரரின் தாக்கம் குறைய செய்யக்கூடாதவை
பயணம்: சனிக்கிழமை கிழக்கு அல்லது வடக்கு திசையில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. மிகவும் அவசியமானால் மட்டுமே இந்த திசைகளில் பயணம் செய்யுங்கள்.
சனிக்கிழமையில் தவிர்க்க வேண்டிய தானம்
சனிக்கிழமையில் அன்னதானம் ஆடை தானம் சிறந்தது. ஆனால், சொர்ண தானம் செய்பவர்கள் சனிக்கிழமையன்று அதனை செய்ய வேண்டாம்.
எள் வாங்குவது
சனிக்கிழமையில் கருப்பு எள் மற்றும் கடுகெஎண்ணெய் தானம் செய்வது நல்லது என்றாலும், அவற்றை கடையில் இருந்து வாங்கி தானம் செய்ய வேண்டாம். வீட்டில் இருப்பவற்றை எடுத்தே தானம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த தானத்தால் பயனில்லை.
இரும்பு வாங்குவது
சனிக்கிழமையன்று இரும்பு அல்லது இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது என்றும், அவ்வாறு செய்வது அசுப பலன்களைக் கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால், இரும்பை தானம் செய்யலாம். சனிக்கிழமையில் இரும்பு தானம் செய்வதன் மூலம் சுப பலன்கள் கிடைக்கும்.
காலணி வாங்குவது
சனிக்கிழமையன்று காலணிகள் செருப்புகளை தானமாக வழங்குவது நல்லது, ஆனால், சனிக்கிழமையில் வேறு யாரிடமிருந்தும் காலணிகள் அல்லது செருப்புகளை பரிசாக வாங்க வேண்டாம்.
எண்ணெய் தீபம்
சனிக்கிழமையன்று எள் எண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. ஆனால் அன்று எண்ணெய் வாங்கக் கூடாது. அதற்குப் பதிலாக வீட்டில் ஏற்கனவே வைத்திருக்கும் எண்ணெயைப் பயன்படுத்தி தீபமிட்டால் போதும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ