ஜூலையில் 5 கிரகங்களில் மாற்றம்: சிலருக்கு அலுகூலம், சிலருக்கு ஆபத்து

Planets Transit in July 2022: ஜூலையில் 5 பெரிய கிரகங்கள் ராசி மாறுகின்றன. இந்த மாற்றத்தால் யாருக்கு ஆதாயம், யாருக்கு ஆபத்து? இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 7, 2022, 11:09 AM IST
  • கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை காரணமாக, ஜூலை மாதம் ஐந்து ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
  • மேஷம், மகரம், சிம்மம், மிதுனம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
  • விருச்சிகம், கன்னி, கடகம், துலாம் ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும்.
ஜூலையில் 5 கிரகங்களில் மாற்றம்: சிலருக்கு அலுகூலம், சிலருக்கு ஆபத்து title=

ஜூலை 2022 கிரகங்களின் மாற்றம்: ஜூலை மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றவுள்ளன. கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஜூலை 12 அன்று, சனி அதன் சொந்த ராசியான மகரத்தில் பிற்போக்கு நகர்வில் நுழைகிறது. ஜூலை 13 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசியில் நுழைவார். ஜூலை 16 ஆம் தேதி சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுகிறார். கிரகங்களின் இந்த மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட தாக்கம் இருக்கும் என இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்: 

கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை காரணமாக, ஜூலை மாதம் ஐந்து ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மேஷம், மகரம், சிம்மம், மிதுனம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய திட்டத்தில் முதலீடு செய்து லாபம் காண்பீர்கள். 

குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவிடுவீர்கள். வெளிநாட்டு உறவினரிடமிருந்து நல்ல செய்தியை பெறுவீர்கள். 

மேலும் படிக்க | சுக்கிரனின் மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 7 வரை அமோகமாக உள்ளது

இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்: 

விருச்சிகம், கன்னி, கடகம், துலாம் ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உங்கள் சிரமங்கள் அதிகரிக்கலாம். தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பணிபுரியும் இடத்தில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வியாபாரத்தில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையாக அனைத்து பணிகளிலும் ஈடுபட வேண்டும். வணிகத்தில் கவனமாக செயல்பட வேண்டும். வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது அதிகபட்ச எச்சரிக்கை தேவை. பண விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். 

இந்த ராசிகள் மீது குறைந்த தாக்கமே இருக்கும்: 

கிரகங்களின் ராசி மாற்றம் காரணமாக சில ராசிகளில் குறைந்த தாக்கமே காணப்படும். தனுசு, ரிஷபம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் சாதாரணமாக இருக்கப் போகிறது. இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும், அதற்கேற்ற பலன்கள் கிடைக்காமல் குறைவான பலன்களே கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 3 ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றும் புதிய யோகம், பண மழை பொழியும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News