Venus Transit in Taurus: ஜோதிட சாஸ்திரப்படி சுகங்களை அளிப்பவனான சுக்கிரன் தனது ராசியை மாற்றப் போகிறார். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதன் ராசியை மாற்றும். இந்த கிரகங்கள் ராசி மாற்றத்தால் சில புதிய ரோஜயோகத்தை உருவாக்கும். அந்த வகையில் வருகிற மே 19ஆம் தேதி, அதாவது இன்று முதல் சுமார் 12 நாட்களுக்குப் பிறகு சுக்கிரன் தனது ராசியை மாற்றப் போகிறார். பொருள் மகிழ்ச்சி மற்றும் ஆடம்பர வாழ்க்கையை அள்ளி வழங்கும் சுக்கிரன் தற்போது மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிகக்உ பெயர்ச்சி அடையப் போகிறார், இதன் காரணமாக குருவுடன் சேர்க்கை நடைப்பெறும். சுக்கிரனின் பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்கள் முன்னேற்றம் அடைவதோடு பணியிடத்தில் புதிய வாய்ப்புகளையும் பெறுவார்கள். எனவே இந்த 3 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. ரிஷபம் (Taurus Zodiac Sign): சுக்கிரனின் பெயர்ச்சி (Sukran Peyarchi Palangal) ரிஷப ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை உருவாக்கும். தொழிலில் வளர்ச்சி இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம், இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். உங்கள் பெற்றோருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும், வெளியூர் பயணம் செல்லலாம். மனைவியுடன் சில சண்டைகள் ஏற்படலாம். இப்போது முதலீடு செய்ய நல்ல நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
2. கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்துள்ளது மகத்தான பலன்கள் கிடைக்கும். உழைக்கும் மக்களுக்கு நல்ல காலம் அமையும். பதவி உயர்வு பெறவில்லை என்றால், இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்களின் சம்பள உயர்வையும் காண வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிகப்படலாம். கணவன்-மனைவி இடையே பிரச்சனைகள் இருந்தால் அவை தீர்வு பெரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள்.
3. விருச்சிகம் (Scorpio Zodiac Sign): சுக்கிரனின் ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சில நல்ல செய்திகளை அள்ளித் தரும். தொழிலதிபர்களுக்கு நல்ல காலம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒப்பந்தம் முடிவடையும், இதனால் நல்ல லாபமும் கிடைக்கும். முதலீடு செய்வதற்கு சாதகமான காலம், எதிர்காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி பொருளாதார நிலை மேம்படும். திருமணமானவர்களின் வாழ்வில் இனிமை இருக்கும். இந்த நேரத்தில் புதிய வாகனமும் வாங்கலாம். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ