Shani Uday 2024 in Kumbh Rashi: ஜோதிட சாஸ்திரத்தில் எல்லா கிரகங்களும் ஒரு காலகட்டத்திற்கு உதயமாகும் அல்லது அஸ்தமனமாகும். தற்சமயம் சனி கும்ப ராசியில் அஸ்தமித்து கடந்த மார்ச் 18 ஆம் தேதி உதயமானார். சனியின் உதயம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். பொதுவாக சனி பகவான் நீதியின் கடவுள் என்று ஜோதிடத்தில் அழைக்கப்பாடுகிறார். அனைத்து கிரகங்களிலும் அவர் மிக முக்கியமான கிரகமாக உள்ளார். சனி பகவானின் சிறிய மாற்றமும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. அவரது அருள் ஒருவர் மீது இருந்து விட்டால் அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்திருக்கும். அந்தவகையில் சனியின் உதயம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நல்ல பலனைத் தரும், அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனிபகவான் இந்த ராசிக்காரர்களிடம் கருணை காட்டுவார்:
மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்கு 10, 11ம் இடங்களுக்கு அதிபதி சனி பகவான் (Shani Dev) ஆவார். எனவே சனி உதயமானதால் மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் தொடர்பு ஏற்படலாம், இதனால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பொருள் ஆசைகள் நிறைவேறும். தொழிலில் முன்னேறறம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷப ராசிக்காரர்களின் 9 மற்றும் 10 வது வீட்டை ஆளும் தெய்வம் சனி ஆவார். அத்தகைய சூழ்நிலையில், சனி உதயமானதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பல பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும்.
கன்னி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்களுக்கு 5, 6ம் வீட்டிற்கு அதிபதி சனி பகவான் ஆவார். சட்டத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் அதிகபட்ச கவனத்தை ஈர்ப்பீர்க்கள.
துலாம் (Libra Zodiac Sign): துலாம் ராசியில் நான்காவது மற்றும் ஐந்தாவது வீட்டின் உரிமையை சனி பகவான் பெற்றுள்ளார். சனி உதயமானதால் துலாம் ராசிக்காரர்களுக்கு அனைத்து துறையிலும் உயர்வு கிடைக்கும். சமய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கலை பெறலாம்.
சனி பகவானை மகிழ்விக்க இதை செய்யுங்கள்:
'ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ' என்று 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.
ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.
தேவைப்படுவோருக்கு ஆடைகள் மற்றும் காலணிகளை தானம் செய்யுங்கள்.
சனிக்கிழமையன்று சனி கோவிலுக்குச் சென்று கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ