செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் அமோக வெற்றி... லாபம் அதிகரிக்கும்

Sevvai Peyarchi Palangal: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 2, 2024, 12:01 PM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும்.
  • இந்த நேரத்தில், பணியிடத்தில் சாதகமான முடிவுகள் எட்டப்படும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணத்தையும் மீண்டும் பெறுவீர்கள்.
செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் அமோக வெற்றி... லாபம் அதிகரிக்கும் title=

Sevvai Peyarchi Palangal: அனைத்து கிரகங்களுக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. ஒவ்வொரு கிரகமும் சில விசேஷ அம்சங்களுக்கான காரணிகளாக இருக்கின்றன. ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. 

ஜூலை 12, 2024 அன்று செவ்வாய் கிரகம் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷபத்தில் பெயர்ச்சி ஆவார். வீடு, மனை, தைரியம், உறுதி, நிலம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர் செவ்வாய். செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்திகள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் அதிக நன்மை பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். அதுமட்டுமின்றி, நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணமும் வந்து சேரும். பொருளாதாரத் துறையில் லாபத்திற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. பண வரவு அதிகமாகும். கடந்த காலத்தில் செய்த முதலீடுகளிலிருந்தும் பலன்களைப் பெறலாம். இந்த நேரத்தில் கோபத்தை கட்டுப்படுத்தி அனுமனை வழிபடுவது நல்லது. இவ்வாறு செய்வதால் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும். புதிய முதலீட்டுகளுக்கும் இது ஏற்று நேரமாக இருக்கும். வணிகத்தை விரிவாக்க வாய்ப்பு அமையும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி் இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: பொற்காலம் பிறக்கும்

சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் ஆக்கப்பூர்வமான நன்மைகளை பெறுவார்கள். இந்த நேரத்தில், அரசு துறையில் வேலை தேடும் மக்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பல துறைகளில் வெற்றிகள் குவியும். தொழில் துறையிலும் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்தக் காலக்கட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளிலிருந்து லாபங்களைப் பெறலாம். இதனுடன், பணித் துறையில் நல்ல பணிக்காக உயர் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். இந்த காலத்தில் முருகப்பெருமானின் அருளால் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதாரத் துறையில் வளர்ச்சி இருக்கும். இந்த காலத்தில் மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்லது.

கன்னி (Virgo)

கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில், பணியிடத்தில் சாதகமான முடிவுகள் எட்டப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணத்தையும் மீண்டும் பெறுவீர்கள். செவ்வாய் பெயர்ச்சியால் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தொழில் துறையிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கக்கூடும். குடும்பத்திலும் மரியாதை அதிகரிக்கும். இத்துடன் இந்த நேரம் மாணவர்களுக்கும் சிறப்பாக அமையும். வேலை தேடுபவர்களும் வெற்றி பெறலாம். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஒரே மாதத்தில் இரு முறை பெயர்ச்சியடையும் சுக்கிரனால் ஜாக்பாட் லாபம் பெறும் 5 ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News