அடுத்த 7 நாட்கள் இந்த ராசிக்காரர்கள் ஜாலியாக இருப்பார்கள், கஷ்டங்கள் நீங்கும்

Weekly Horoscope: இந்த வார தொடக்கத்திலேயே செல்வம் மற்றும் ஆடம்பரம் தரும் சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த அதிர்ஷ்டசாலிகள் இந்த வாரம் நிறைய பணம் பெறுவார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 29, 2023, 02:57 PM IST
  • உத்தியோகத்தில் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • நண்பரின் உதவியால் ஆதாயம் உண்டாகும்.
  • தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அடுத்த 7 நாட்கள் இந்த ராசிக்காரர்கள் ஜாலியாக இருப்பார்கள், கஷ்டங்கள் நீங்கும் title=

வாராந்திர (மே 29 முதல் ஜூன் 4 வரை) ராசிபலன் 2023: இன்று, மே 29 முதல், சில ராசிக்காரர்களின் வாழ்வில் பொன்னான நாட்கள் தொடங்கப் போகிறது. நாளை மே 30 ஆம் தேதி சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு செல்வத்தையும் செழிப்பையும் தரும். எனவே இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உகந்தது என்பதை வார ராசிபலன் மூலம் தெரிந்து கொள்வோம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள் இவையே:

மேஷ ராசி: இந்த வார ராசிபலனை படி, மேஷ ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் பண வரவு கிடைக்கும். உங்கள் வருமானமும் அதிகரிக்கும், மேலும் வயதானவர்களிடமிருந்து நிறைய பணத்தை பெறுவீர்கள். சிக்கி இருந்த பணம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல நேரமாக இருக்குகம் . உத்தியோகத்தில் பெரிய மாற்றம் ஏற்படலாம். நீங்கள் ஒரு மத ஸ்தலத்திற்கு யாத்திரை செல்லலாம்.

மேலும் படிக்க | வக்ரத்தில் செல்லும் சனி..! 7 ராசிக்காரர்கள் 5 மாதங்கள் கவனமாக இருக்கணும் 

ரிஷப ராசி: ரிஷப ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். ஏற்றுமதி மாற்றும் இறக்குமதியுடன் தொடர்புடைய மக்கள் பெரிதும் பயனடைவார்கள். இந்த வாரம் முழுவதும் நீங்கள் பிஸியாக இருப்பிபீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். விலையுயர்ந்த பரிசுகளை நீங்கள் எங்கிருந்தும் பெறலாம்.

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று பொறுமை குறைவாகவே இருக்கும், அவசரத்தை தவிர்த்து கவனமாக முடிவெடுத்தால் கட்டாயம் தொழிலில் லாபம் உண்டாகும். வருமானம் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். நண்பரின் உதவியால் ஆதாயம் உண்டாகும். மத ஸ்தலத்திற்கு யாத்திரை செல்லலாம். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம்.

விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலையில் உற்சாகம் இருக்கும். பண பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். உங்கள் புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் லாபத்தை ஈட்டுவீர்கள். மத ஸ்தலத்திற்கும் பயணம் மேற்கொள்ளலாம். தாயாரின் ஆதரவும் அனுகூலமும் கிடைக்கும்.

தனுசு ராசி: இந்த வாரம் தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், படிப்பில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். குடும்பத்துடன் பயணம் செய்வீர்கள். கடின உழைப்பு அதிகமாக இருக்கும் ஆனால் அதற்கான பலனும் கிடைக்கும். சொத்து சம்பந்தமான சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும்.

மீன ராசி: இந்த வாரம் தனுசு ராசிக்காரர்கள் போல் மீன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் பொறுப்புடன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, வசதிகள் அதிகரிப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பண வரவு சாதகமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 18 நாட்கள்.. சனி வக்ர பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு பண மழை, லட்சுமி கடாஷம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News