இனி பும்ராவை நம்யிருந்தால் அவ்வளவு தான்... இந்திய அணியை எச்சரிக்கும் ஆகாஷ் சோப்ரா

Akash Chopra on Bumrah: ஜஸ்பிரித் பும்ராவை எல்லாம் இனி இந்திய அணி நம்பிக் கொண்டிருக்க முடியாது. அவர் இல்லாமல் விளையாட இந்திய அணி தயாராக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 12, 2023, 08:46 AM IST
இனி பும்ராவை நம்யிருந்தால் அவ்வளவு தான்... இந்திய அணியை எச்சரிக்கும் ஆகாஷ் சோப்ரா title=

காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத ஜஸ்பிரித் பும்ரா, 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பே இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பைக்கு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, அவரின் காயம் குணமாகாமல் இருந்தது. இப்போது, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் தொடர்களிலும் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியில் சேர்க்கப்பட்டபோதும், திடீரென பிசிசிஐ அவர் விளையாட மாட்டார் என அறிவித்தது. 

மேலும் படிக்க | IND vs SL: இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே... கோலியின் மிரட்டல் சதம் - சச்சின் சாதனை சமன்!

பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமி முதலில் அவர் உடல் தகுதி பெற்றுவிட்டதாக கூறிய நிலையில், திடீரென யுடர்ன் அடித்தது. அதனால் பிசிசிஐயும் அவசர அவசரமாக அவரை இந்திய அணியில் இருந்து நீக்கியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, பும்ரா இல்லாமல் இந்திய அணி விளையாட பழகிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர் காயமடைந்ததால், கடந்த உலக கோப்பையில் விளையாடவில்லை. இதனால் கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டு 20 ஓவர் உலக கோப்பையில் சிறப்பாக விளையாட முடியவில்லை. 

இதனால், பும்ராவை நம்பிக் கொண்டிருக்காமல் அவருக்கு மாற்றான ஒரு பந்துவீச்சாளருடன் இந்திய அணி தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் இது உலக கோப்பை ஆண்டு. ஏற்கனவே உலக கோப்பையை தவறவிட்டிருக்கும் இந்திய அணி, எதிர்வரும் உலக கோப்பையையாவது வெற்றி பெற வேண்டும் என்றால் பந்துவீச்சாளர் தேர்வு முறையில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Ind vs SL: 2வது ஒருநாள் போட்டியில் 2 வீரர்கள் மாற்றம்?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News