ஆசிய விளையாட்டு போட்டியின் கலப்பு இரட்டையார் பிரிவு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது....
உலகின் மிகப்பெரிய 18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி (நேற்று) தொடங்கியது. இப்போட்டியில் சுமார் 45 நாடுகள் பங்கேற்றுள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.
போட்டியின் முதல் நாளான இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சார்பில் அபூர்வி சண்டேலா மற்றும் ரவி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் மொத்தம் 429.9 புள்ளிகள் பெற்ற அவர்களுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இதனால் முதல் நாளிலேயே இந்தியாவின் பதக்க வேட்டை தொடங்கியுள்ளது.
#AsianGames2018:Apurvi Chandela - Ravi Kumar win bronze medal in 10m Air Rifle Mixed Team event. pic.twitter.com/vLxaZqxY27
— ANI (@ANI) August 19, 2018