லண்டனில் உள்ள ஓவலில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் ஐந்தாவது ஆஷஸ் 2023 டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) முக்கிய சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். 32 வயதான பென் ஸ்டோக்ஸ், ரெட்-பால் கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான அவர், மேற்கிந்திய தீவுகளின் புகழ்பெற்ற ஆல்-ரவுண்டர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் ஆகியோருக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து, 100+ விக்கெட்களை வீழ்த்தி, 100+ கேட்சுகளை பிடித்து தனித்துவமான டெஸ்ட் ரெக்கார்டின் மூலம் மூன்றாவது கிரிக்கெட் வீரர் ஆனார்.
இதுவரை விளையாடிய 97 டெஸ்ட் போட்டிகளில் 174 இன்னிங்ஸ்களில் 6075 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ், 197 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தினார், வெள்ளிக்கிழமை ஆட்டத்தின் இரண்டாவது செஷனின் போது டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் தனது 100வது கேட்சை முடித்தார். இரண்டாம் நாள் ஆட்டத்தில், ஜோ ரூட்டின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர்-பேட்டர் அலெக்ஸ் கேரியின் கேட்சை பிடித்தார் ஸ்டோக்ஸ். கேரி ஒரு டிரைவ் விளையாட முயன்றார், ஆனால் 30 யார்டு வட்டத்திற்குள் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் இடம் கேட்ச் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100வது கேட்சை பிடித்ததன் மூலம், சோபர்ஸ் மற்றும் காலிஸ் ஆகியோருடன் இந்த பட்டியலில் இணைந்தார்.
மேலும் படிக்க | எலைட் வீரர்களை சஸ்பெண்ட் செய்த ஐசிசி! அபராதம் கட்டிய கிரிக்கெட்டர்கள் பட்டியல்
மேற்கிந்தியத் தீவுகளுக்கான முக்கிய வீரராக இருந்த சோபர்ஸ் அவரது டெஸ்ட் வாழ்க்கையில், மொத்தம் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 57.78 சராசரியில் 8032 ரன்களை எடுத்தார், மேலும் பந்து வீச்சின் மூலம் அவர் 235 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவர் ஒரு சிறந்த பீல்டராகவும், 109 கேட்சுகளை எடுத்தார். அதேசமயம், தென்னாப்பிரிக்கா அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த காலிஸ், 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 280 இன்னிங்ஸ்களில் மொத்தம் 13,289 ரன்கள் குவித்துள்ளார். ஒரு பந்துவீச்சாளராக, காலிஸ் தனது 18 ஆண்டு கால டெஸ்ட் வாழ்க்கையில் 292 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அதுமட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது வெற்றிகரமான பீல்டர் மற்றும் 200 கேட்சுகளை அவர் பெற்றுள்ளார்.
2023 ஆஷஸில் ஸ்டோக்ஸ்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற ஸ்டோக்ஸ், நடந்து வரும் ஆஷஸ் 2023ல் தனது பேட்டிங்கால் ஈர்க்கப்பட்டார். எட்டு இன்னிங்ஸ்களில் 363 ரன்களுடன், அவர் முன்னணி ரன் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார், ஆனால் பந்து வீச்சில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க முடிந்தது. சமீபத்தில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஸ்டோக்ஸ் நீண்ட நாட்களாக பந்து வீசவில்லை. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டியிலும் ஸ்டோக்ஸ் பந்து வீசவில்லை.
மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி தேதி மாற்றம்...? பிரச்னை இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ