ஆசிய பெண்கள் ஹாக்கி: இந்திய அணி சாம்பியன்

பெண்களுக்கான ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் தொடங்கியது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகள் முடிவில் இந்தியா மற்றும் சீனா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

Last Updated : Nov 6, 2016, 09:52 AM IST
ஆசிய பெண்கள் ஹாக்கி: இந்திய அணி சாம்பியன் title=

சிங்கப்பூர்: பெண்களுக்கான ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் தொடங்கியது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகள் முடிவில் இந்தியா மற்றும் சீனா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

நேற்று மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் சீனா - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய பெண்கள் அணி 2-1 என சீன அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 13-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது.  44-வது நிமிடத்தில் சீன அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீராங்கனை ஷோங் மெங்லிங் அபாரமாக இந்த கோலை அடித்து அசத்தினார். 60-வது நிமிடத்தில் இந்திய அணி 2-வது கோலை அடித்து சீனாவுக்கு அதிர்ச்சி அளித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோலை நோக்கி அடித்த பந்து தடுத்து திரும்பியதை தீபிகா தாக்குர் துரிதமாக செயல்பட்டு கோலாக மாற்றினார். முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

 

Trending News