ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மிகவும் பரிதாபகரமாக, அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியுற்று வெளியேறியது. நாக்-அவுட் போட்டி என்றில்லாமல், 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று, தற்போது சாம்பியனாக உள்ளது.
இதில், இந்தியாவின் தோல்விக்கு டி20 போட்டிகளை சரியாக அணுகாமல் ஒருநாள் தொடர் போன்று ஆடுவதும், டி20 அணிகளுக்கான வீரர்களை அணியில் தேர்வு செய்யாமல் இருப்பதுமே முதன்மை காரணங்களாக பார்க்கப்பட்டன.
கேஎல் ராகுல் போன்று அழுத்தத்தில் தடுமாறுபவர்களை அதிக முறை ஓப்பனிங் விளையாட வைத்தது, இடதுகை பேட்டர் இஷான் கிஷன் போன்றோருக்கு அணியில் சரியான இடம்கொடுத்து வாய்ப்பு கொடுக்காதது, இந்திய அணியின் சிறந்த டி20 வீரர்களான சஞ்சு சாம்சன், பிருத்வி ஷா ஆகியோரை அணியில் சேர்க்க பரிசீலிக்காதது என இந்திய அணியின் தேர்வுக்குழு மீது சராமாரியாக கேள்விகள் எழுந்தன.
மேலும் படிக்க | 'பேட்டிங் ஆடுறவரு யார் தெரியுமா...' ஐபிஎல் ஏலத்தை வைத்து ஆஸி., வீரரை கலாய்த்த பட்லர்
இந்நிலையில், சேதன் சர்மா தலைமையிலான இந்திய சீனியர் ஆடவர் அணிக்கான தேர்வுக்குழுவை ஒட்டுமொத்தமாக பிசிசிஐ நேற்று நீக்கியுள்ளது. சேதன் சர்மாவின் தலைமையில் தேர்வான இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பை மட்டுமின்றி, கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையையும், 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் கோட்டைவிட்டது.
வடக்கு மண்டலத்திற்கு சேதன் சர்மா, மத்திய மண்டலத்திற்கு ஹர்விந்தர் சிங், தெற்கு மண்டலத்திற்கு சுனில் ஜோஷி, கிழக்கு மண்டலத்திற்கு தேபாசிஷ் மொகந்தி என தேசிய தேர்வுக்குழுவில் குறுகிய காலம் மட்டும் பணியாற்றியவர்கள் இவர்கள் மட்டும்தான். இவர்களில் சிலர் 2020, 2021ஆம் ஆண்டில்தான் நியமிக்கப்பட்டனர்.
NEWS: BCCI invites applications for the position of National Selectors (Senior Men).
Details : https://t.co/inkWOSoMt9
— BCCI (@BCCI) November 18, 2022
வழக்கமாக சீனியர் தேசிய அணிக்கான தேர்வுக்குழுவின் பணிகாலம் 4 ஆண்டுகள். மேலும், பணிகாலத்தை நீட்டிக்கவும் இயலும். ஆனால், இரண்டரை ஆண்டுகளிலேயே சேதன் தலைமையிலான தேர்வுக்குழு கலைக்கப்பட்டுள்ளது. தெற்கு மண்டல தேர்வுக்குழு உறுப்பினர் அபே குருவில்லாவின் பதவிக்காலம் முடிந்தபின், அதில் வேறுயாரும் பணியமர்த்தப்படவில்லை.
உலகக்கோப்பை தோல்விக்கு முன்பே, அதாவது அக். 18ஆம் தேதி நடைபெற்ற பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டத்திலேயே சேதன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை நீக்க முடிவெடுக்கப்பட்டதாக அப்போதே தகவல்கள் வெளியாகின.
தேர்வுக்குழுவை நீக்கியது மட்டுமின்றி, புது உறுப்பினர்களை தேர்வு செய்ய சீனியர் ஆடவர் இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான, விண்ணப்பங்களையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய அணி தற்போது, நியூசிலாந்து அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ