இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருந்து வரும் ரவிசாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியிலிருந்து முற்றிலுமாக விலகிக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மற்ற பயிற்சியாளர்கள் ஐபிஎல் அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்திய அணியின் (Indian Cricket) தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் என அனைவரும் விலகிக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் (BCCI) பயிற்சியாளர்களை மாற்றலாம் என்ற திட்டம் இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
ALSO READ | Tokyo Olympics: ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு பரிசு மழை பொழியும் BCCI
2014ஆம் ஆண்டு இந்திய அணியின் இயக்குனராக பொறுப்பேற்ற ரவி சாஸ்திரி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு 2017 ஆம் ஆண்டிலிருந்து முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் தலைமையில் இந்திய அணி 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி மற்றும் கடந்த மாதம் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியடைந்தாலும் மற்ற நாடுகளில் விளையாடும்போது சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கையில் டெஸ்ட் தொடரை முழுவதுமாக வென்றுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் வரலாற்று வெற்றிகளையும் பெற்றுள்ளது.
இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை தோற்கடித்து சாதனை படைத்தது. மிகவும் பலம் பொருந்திய அணிகளாக கருதப்பட்ட நாடுகளை இந்திய அணி வெற்றி பெற்று வலுவான ஒரு கிரிக்கெட் அணியாக உயர்ந்தது. ரவி சாஸ்திரி இந்திய அணியை காப்பாற்ற வந்த ஜாம்பவான் என்று அனைவராலும் பேசப்பட்டார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கும் இடையே உள்ள புரிதல் அனைவரும் அறிந்ததே. இதன் விளைவுகள் பல ஆட்டங்களில் வெளிப்பட்டுள்ளன. ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களையும் வளர்த்துள்ளார்.
பிசிசிஐ நெறிமுறைகளின்படி இரண்டு மாதங்களில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு பிறகு பயிற்சியாளராக விருப்பம் உள்ளவர்களை விண்ணப்பிக்க சொல்லும். பிசிசியில் உள்ள சில முக்கிய அதிகாரிகள் ஏற்கனவே இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. கடந்த மாதம் ராகுல் டிராவிட் தலைமையில் இளம் வீரர்களுடன் இலங்கை சென்ற இந்திய அணி ஒருநாள் தொடரைய வென்றுள்ளது. எனவே ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தால் அவரே தலைமை பயிற்சியாளராக வருவார் என்று அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பயணத்தின்போது இந்திய அணியின் பயிற்சியாளராக ஆக திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்தது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. எனக்கு வேறு எந்த எண்ணமும் கிடையாது. தலைமை பயிற்சியாளராக நிறைய சவால்கள் உள்ளது. இதுவரை எந்த முடிவும் நான் எடுக்கவில்லை" என்று ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார். மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்குமாறு கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ALSO READ | BCCI: மீண்டும் தொடங்கும் Ranji Trophy போட்டிகள் 2021-22 தேதிகள் அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR